Showing posts with label பொது தொல்லை. Show all posts
Showing posts with label பொது தொல்லை. Show all posts

Tuesday, 14 April 2015

தினம் ஓரு சட்டம் - இதச 290



Section 290 in The Indian Penal Code





இதச 268 லிருந்து இதச 289 வரை உள்ள பிரிவு களில் 

குறிப்பிடாத வேறு எதாவது பொதுத்தொல்லையை 

யாராவது புரிந்தாலும்  

அவருக்கு இரு நூறு ருபாய் வரை அபராதம் 

தண்டனையாக விதிக்கப்படும்





Punishment for public nuisance in cases not otherwise pro­vided for.
  —Whoever commits a public nuisance in any case not otherwise punishable by this Code, 
  
   shall be punished with fine which may extend to two hundred rupees. 

 [Source & Content http://indiankanoon.org/doc/1099867/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 290



Section 290 in The Indian Penal Code





இதச 268 லிருந்து இதச 289 வரை உள்ள பிரிவு களில் 

குறிப்பிடாத வேறு எதாவது பொதுத்தொல்லையை 

யாராவது புரிந்தாலும்  

அவருக்கு இரு நூறு ருபாய் வரை அபராதம் 

தண்டனையாக விதிக்கப்படும்





Punishment for public nuisance in cases not otherwise pro­vided for.
  —Whoever commits a public nuisance in any case not otherwise punishable by this Code, 
  
   shall be punished with fine which may extend to two hundred rupees.

Monday, 13 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 289



Section 289 in The Indian Penal Code



    
     இதச 289. தம் வசமள்ள மிருகத்தால் , எந்த மனிதருக்கும் உயிருக்கும் அபாயம் ஏற்படாமலும், உடலுக்கும் கொடுங்காயம் நிகழாமலும் பாதுக்காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் . அவர் வேண்டும் மென்றே அல்லது கவனக்குறைவாகவோ அத்தகைய பாதுக்காப்பான காரியத்தைச் செய்யவில்லை யேன்றால் அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

 
Negligent conduct with respect to animal.—

   
      Whoever knowingly or negligently omits to take such order with any animal in his possession as is sufficient to guard against any probable danger to human life, or any probable danger of grievous hurt from such animal, 


   shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 


நன்றி http://indiankanoon.org/doc/1162492/

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 288







      இதச 288. ஒரு கட்டிடத்தை பழதுப்பார்க்கும் போதும் அல்லது இடிக்கும் போதும் , அந்தக் கட்டிடத்தின் பாகங்கள் சிதறி விழுவதால் மனித உயிருக்கும் உடலுக்கும் அபாயம் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படாத விதத்தில் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் காரியம் செய்யவேண்டும். 

    அப்படி செய்யாவிடில் அதனால் எதாவது உயிர் சேதம் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்ப்பட்டால்

  ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

   Negligent conduct with respect to pulling down or repairing buildings.


  —Whoever, in pulling down or repairing any building, knowingly or negligently omits to take such order with that building as is sufficient to guard against any probable danger to human life from the fall of that building, or of any part there­of, 


     shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 287



Section 287 in The Indian Penal Code





இதச 287.  மனித உயிருக்கும் உடலுக்கும் அபாயம் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில் ஒரு இயந்திரத்தை அசட்டு துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக பயன்படுத்துவது குற்றமாகும்.




   மனித உயிருக்கும் உடலுக்கும் அபாயம் அல்லது காயம் ஏற்படுத்தும ஒரு இயந்திரத்தை பாதுக்காப்புடனும் எச்சரிக்கையுடனும் வைத்திருக்காவிடின் அதுவும் குற்றமாகும்.


இந்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 
 


   
Negligent conduct with respect to machinery.

  —Whoever does, with any machinery, any act so rashly or negligently as to endan­ger human life, or to be likely to cause hurt or injury to any other person, or knowingly or negligently omits to take such order with any machinery in his possession or under his care as is sufficient to guard against any probable danger to human life from such machin­ery, 


   shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 

http://indiankanoon.org/doc/180291/

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 286




    இதச 286. அசாதாரண துணிச்சலுடன் அல்லது கவனக்கறைவாக , மனித உயிருக்கும் உடலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் வெடி மருந்துப்பொருட்களை பயன்படுத்துவது குற்றமாகும்.

     
     தம் வசத்தில் உள்ள அத்தகைய வெடிப்பொருட்களை மனித உயிருக்கு அபாயம் ஏற்படாமல் பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டும். அதிலிருந்து தவறுவது குற்றமாகும்.

      இந்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 
 
  Negligent conduct with respect to explosive substance.

    
    —Whoever does, with any explosive substance, any act so rashly or negligently as to endanger human life, or to be likely to cause hurt or injury to any other person, or knowingly or negligently omits to take such order with any explosive substance in his possession as is sufficient to guard against any probable danger to human life from that substance, 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 

[Source & Content http://indiankanoon.org/doc/980159/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 285





          இதச 285. நெருப்பு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அசட்டுத் துணிச்சலுடன் அல்லது கவனமில்லாமல் மனித உயிருக்கு அபாயம் அல்லது உடலுக்குக்கு காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில் உபயோகிப்பது குற்றமாகும்.


.      நெருப்பு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பிறருக்கு காயம் அல்லது தீங்கு அல்லது மனித உயிருக்கு அபாயம் ஏற்படாமல் பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டும். அதிலிருந்து தவறுவது குற்றமாகும்.


         இந்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
  

Negligent conduct with respect to fire or combustible mat­ter.

  
     —Whoever does, with fire or any combustible matter, any act so rashly or negligently as to endanger human life, or to be likely to cause hurt or injury to any other person, or knowingly or negligently omits to take such order with any fire or any combustible matter in his possession as is sufficient to guard against any probable danger to human life from such fire or combustible matter, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 





[Source  Content http://indiankanoon.org/doc/1728663/]



Saturday, 11 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 283




       
          தம்மிடத்தில் உள்ள பாத்தியம் அல்லது இடத்தை தூய்மையாக வைத்திருக்கதவறுதல் அல்லது தமது நடவடிக்கையால் பொது மக்கள் உபயோகிக்கும் பாதையில் அல்லது நீர் வழியாகக் செல்வோருக்கு தடை, தீங்கு அல்லது அபாயம் நேரிட்டால் அது குற்றமாகும்.
       இத்தகைய குற்றத்திற்கு ரூபாய்
இரு நூறுக்கு மேற்படாத அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்


Section 283 in The Indian Penal Code
 
  Danger or obstruction in public way or line of navigation.
               

     —Whoever, by doing any act, or by omitting to take order with any property in his possession or under his charge, causes danger, obstruction or injury to any person in any public way or public line of navigation, 

    shall be punished with fine which may extend to two hundred rupees. 

[Thanks & Source http://indiankanoon.org/doc/1162540/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 281





     
         ஒரு கப்பலோட்டியைச் சரியான திசையில் இருந்து தவறான திசைக்கு திருப்ப வேண்டும் என்பதற்காக, தவறான அடையாளத்தை அல்லது மிதவையை அல்லது விளக்கைக் சமிஞ்சைக் காட்டுவது குற்றமாகும்.


    இந்த குற்றத்திற்கு ஏழு வருடம் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 281 in The Indian Penal Code


  Exhibition of false light, mark or buoy.—
   
     Whoever exhibits any false light, mark or buoy, intending or knowing it to be likely that such exhibition will mislead any navigator, 
     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both. 
[Source & Content http://indiankanoon.org/doc/52012/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 280



      அஜாக்கிரதையாக அல்லது அசட்டுத் துணிச்சலுடன். மனித உயிருக்கு ஆபத்து அல்லது உடலுக்கு தீங்கு அல்லது காயம் ஏற்படும் வகையில் ஒரு கப்பல் அல்லது படகினை ஒட்டுவது குற்றமாகும்.     

     இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.




Section 280 in The Indian Penal Code
 
 Rash navigation of vessel.
 
  —Whoever navigates any vessel in a manner so rash or negligent as to endanger human life, or to be likely to cause hurt or injury to any other person, 
 
 
 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1573258/]

Friday, 10 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 279






       மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அல்லது காயம் அல்லது  துன்பம் உண்டாக்கும் வகையிலும் ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவதும் சவாரி செய்வதும் குற்றமாகும்.  


   இதற்கு ஆறுமாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 279 in The Indian Penal Code
  Rash driving or riding on a public way.

—Whoever drives any vehicle, or rides, on any public way in a manner so rash or negligent as to endanger human life, or to be likely to cause hurt or injury to any other person, 
   shall be punished with im­prisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

[Source & Content http://indiankanoon.org/doc/1270101/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 277 & 278


இ.த.ச 277


         பொது மக்களின் உபயகத்திற்கென உள்ள நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை அசுத்தப்படுத்தி, பொது மக்களுக்கு பயன்படாமல் செய்வது குற்றமாகும்.    




      இதற்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்



இ.த.ச 278

               மக்கள் வசிக்கின்ற அல்லது தொழில் புரிகின்ற அல்லது பொது பாதையாக உபயோகின்ற ஒர் இடத்தின் சுற்றுப்புறத்தையும், பொதுச் சுகாதரக்கேடு உண்டாக்கும் வகையில் அசுத்தப்படுத்துவது குற்றமாகும்.  

      இந்த குற்றத்திற்கு ஐந்து நூறு ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.





Section 277 in The Indian Penal Code
  Fouling water of public spring or reservoir. 
  
    Whoever volun­tarily corrupts or fouls the water of any public spring or reser­voir, so as to render it less fit for the purpose for which it is ordinarily used, 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to three months, or with fine which may extend to five hundred rupees, or with both. 
[Source & Content  http://indiankanoon.org/doc/1374604]



Section 278 in The Indian Penal Code
   Making atmosphere noxious to health.—
   
    Whoever voluntarily vitiates the atmosphere in any place so as to make it noxious to the health of persons in general dwelling or carrying on business in the neighbourhood or passing along a public way, 
   shall be punished with fine which may extend to five hundred rupees. 
[Source & Content http://indiankanoon.org/doc/1368265]

Tuesday, 7 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 270




                          மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் தொத்து நோயைப் பரப்பக் கூடிய எந்த செயலையும் குற்ற மனதுடன் அல்லது தெளிவுடன் யார் புரிந்தாலும் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்




Section 270 in The Indian Penal Code
 
    Malignant act likely to spread infection of disease danger­ous to life.—Whoever malignantly does any act which is, and which he knows or has reason to believe to be, likely to spread the infection of any disease dangerous to life, 
 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1164731/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 271




          தொத்து நோய்கள் பரவி இருக்கும்பொழுது அல்லது பரவி இருக்கும் பிரதேத்திலிருந்து வருகின்ற அல்லது பரவக்கூடிய தொத்து நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி உள்ள கப்பலை எங்கும் செல்லதவாறு தடுத்து நிறுத்துவதற்குந என்று போடப்பட்டுள்ள எந்த உத்தரவையும், அத்தகைய உத்தரவு போடப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்தும் மீறி நடப்பது குற்றமாகும். அத்தகைய கப்பலில் உள்ள வரோடு அல்லது வேறு பகுதியில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதும் கொள்வதும் குற்றமாகும். 

      இந்த குற்றத்திற்கு ஆறு மாதம் சிறை தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டணையாக விதிக்கப்படும்.





Section 271 in The Indian Penal Code
     
            Disobedience to quarantine rule.—Whoever knowingly disobeys any rule made and promulgated 1[by the 2[***] Government 3[***] for putting any vessel into a state of quarantine, or for regulating the intercourse of vessels in a state of quarantine with the shore or with other vessels, or for regulating the intercourse between places where an infectious disease prevails and other places, 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both.

[Thanks & Source http://indiankanoon.org/doc/1726256/]

Monday, 6 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 269


     


       உயிர்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் தொற்றுநோயைப் பரப்பக்கூடிய அல்லது பரப்பக் கூடும் எந்தச் செயலையும் யாரும் செய்யக்கூடாது. 

    அப்படி அத்துமீறி அந்த செயலைப் செய்தவருக்கு ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்



Section 269 in The Indian Penal Code
  
     Negligent act likely to spread infection of disease danger­ous to life.—Whoever unlawfully or negligently does any act which is, and which he knows or has reason to believe to be, likely to spread the infection of any disease dangerous to life, 
   shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both. 

[Source & Content http://indiankanoon.org/doc/734195/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 268





     ஒருவர் செய்கின்ற ஒரு செயலால் பொதுமக்களுக்கு அல்லது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு அல்லது பொது மக்களின் உரிமைக்கு குந்தகம் அல்லது தீீங்கு அல்லது அபாயம் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்ப்பட்டால் அதனை பொதுத் தொல்லை என்று கூறுகிறோம். தனிப்பட்ட ஒரு மனிதனுக்குச் உபயோகமாகக் இருக்கின்றது என்ற காரணம் காட்டி எந்தப் தொல்லையையும் மன்னிக்க முடியாது அல்லது அனுமதிக்க முடியாது.


Section 268 in The Indian Penal Code
  Public nuisance.—A person is guilty of a public nuisance who does any act or is guilty of an illegal omission which causes any common injury, danger or annoyance to the public or to the people in general who dwell or occupy property in the vicinity, or which must necessarily cause injury, obstruction, danger or annoyance to persons who may have occasion to use any public right. A common nuisance is not excused on the ground that it causes some convenience or advantage.