அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.அதனால் சமுக விரோதிகள் பெண்கள் மீது அமில வீச்சை சர்வ சாதாரணமாக செய்து வந்தார்கள். அதனால் இந்த புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதன் கீழ் அமிலம் வீசுபவர்களுக்கு ஐந்து ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை பரிந்துரைக்கப்பட்டன.
அதனை குறித்து கீழே காணலாம்...
இதச 326 - புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி
எவர் ஒருவர் பிறருக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஒரு பாதிப்பு அல்லது ஒரு குறைப்பாட்டை அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பையோ அல்லது காயம் அல்லது தீக்காயம் அல்லது மாற்றம் அல்லது குறைப்பாடு உடலுக்கோ அல்லது உடலின் ஒருப் பகுதிக்கோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது ஒருவருக்கு ஒரு கொடுங்காயத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் அமில வீச்சு செய்வதும் உட்படுத்துவதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு தண்டனையாக பத்து ஆண்டுகள் வரையில் குறையாத சிறைக்காவல் தண்டனை அல்லது ஆயுள் முழுவதும் நீட்டிக்கப்பட கூடிய ஆயுள்தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
விதிக்கப்படும் அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும்
அவரின் நலனுக்காகவும் கொடுக்கும் படி பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள விளக்கம் 1 மற்றும் விளக்கம் 2 கீழே உள்ள பிரிவில் காணலாம்
தகவல் மற்றும் நன்றி- வழக்கறிஞர் பாஸ்கர்
Thanks - https://www.facebook.com/groups/403720059836363/
IPC 326A: Whoever causes permanent or partial damage or deformity to, or burns or maims or disfigures or disables, any part or parts of the body of a person or causes grievous hurt by throwing acid on or by administering acid to that person, or by using any other means with the intention of causing or with the knowledge that he is likely to cause such injury or hurt,
shall be punished with imprisonment of either description for a term which shall not be less than ten years but which may extend to imprisonment for life, and with fine:
Provided that such fine shall be just and reasonable to meet the medical expenses of the treatment of the victim:
Provided further that any fine imposed under this section shall be paid to the victim.
Explanation 1.- For the purposes of ..... this section, "acid" includes any substance which has acidic or corrosive character or burning nature, that is capable of causing bodily injury leading to scars or disfigurement or temporary or permanent disability.
Explanation 2.- For the purposes of ..... this section, permanent or partial damage or deformity shall not be required to be irreversible.'.
https://en.wikipedia.org/wiki/Section_326_A_of_the_Indian_Penal_Code
இதச 326 - புதிய திருத்தம் 326B யின் படி
எவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு அல்லது குறைப்பாடு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அது குற்றமாகும்.
மேலும் ஒருவருக்கு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகாமாகவோ ஒரு பாதிப்பு அல்லது குறைப்பாட்டை உண்டாக்குவது அல்லது ஒரு காயத்தை உண்டாக்குவது, அல்லது தீக்காயத்தை உண்டாக்குவது, அல்லது தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்குவது அல்லது ஊனத்தை உண்டாக்குவது அல்லது ஒரு கொடுங்காயத்தை உண்டாக்குவது
அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
விளக்கம் 1 - இந்தப் பிரிவிலும் மற்றும் இ.த.ச 326அ பிரிவிலும் அமிலம் என்பது ஒரு அமிலமோ அல்லது அதனை சார்ந்த ஒரு வேதியியல் பொருளாகவோ இருக்காலாம் அது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமோ ஆகும்.
விளக்கம் 2 - இந்தப் பிரிவிலும் மற்றும் இ.த.ச 326அ பிரிவிலும் கூறப்பட்டுள்ள நிரந்தரமான அல்லது பகுதியான குறைப்பாடு அல்லது குறைப்பாடு என்பது திரும்ப பெறமுடியாத ஒரு உடலின் சேதத்தைக் குறிக்கும்.
தகவல் மற்றும் நன்றி- வழக்கறிஞர் பாஸ்கர்
Thanks - https://www.facebook.com/groups/403720059836363/
IPC 326B: Whoever throws or attempts to throw acid on any person or attempts to administer acid to any person, or attempts to use any other means, with the intention of causing permanent of partial damage or deformity of burns or maiming or disfigurement or disability or grievous hurt to that person,
shall be punished with imprisonment of either description for a term which shall not be less than five years, but which may extent to seven years and also be liable to fine.
Explanation 1.- For the purposes of section 326 A and this section, "acid" includes any substance which has acidic or corrosive character or burning nature, that is capable of causing bodily injury leading to scars or disfigurement or temporary or permanent disability.
Explanation 2.- For the purposes of section 326 A and this section, permanent or partial damage or deformity shall not be required to be irreversible.'.
https://en.wikipedia.org/wiki/Section_326_B_of_the_Indian_Penal_Code
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment