Thursday, 10 March 2016

தினம் ஒரு சட்டம் - ஒருவரை சம்மன் அனுப்பி குற்றவாளியாக்குதல்





       யாரையாவது சம்மன் அனுப்பி குற்றவாளியாக்க முடியுமா.... முடியும் அவர் அந்த சம்மனில் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்றால்  இ.த.ச பிரிவு 174 பிரிவின் கீழ் குற்றமாக்க முடியும் அவரை ஒரு மாதம் வரை அவரை சிறையில் தள்ள  முடியும் மேலும் ஒருவருக்கு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லாமல் ஒரு சம்மனை அனுப்பி அவருக்கு ஆஜராக வேண்டிய தினத்திற்கு பின்பாக சம்மன் கிடைக்க செய்ந்தாலும் அவரை இந்த பிரிவின் கீழ் குற்றவாளியாக்க முடியும். இதேல்லாம் படித்தவர்களும் சட்டத்தை தெரிந்தவர்களும் செய்யும் சதி மக்களே.   உஷார் மக்களே.....


     முடியுமா இல்லை முடியாத இந்த சம்மனைப் பாருங்கள் அனுப்பிய தேதியையும் ஆஜராக வேண்டிய தேதியையும். இதேல்லாம் யாரோ தெரியாமல் செய்யவில்லை சட்டத்தையும் அதனை காப்பாற்ற வேண்டியவர்களும் செய்கிறார்கள். யார் இதைக் கேட்பார்கள் ஏழைகளுக்கு பாமரர்களுக்கும்.

    



அனுப்பிய தேதி 39-01-2015, கிடைத்த தேதி 04-02-2015, ஒரு மாநிலத்திலிருந்து மற்றோரு மாநிலத்திற்கு ஒரு கடிதம் செல்ல குறைந்தப்பட்சம் 3 அல்லது 4 நாட்களாகும் . அதனை கிடைத்தப்பின்பு அவர் வர எத்தனை நாட்களாகும் என உங்கள் கணக்கிலே விடுகிறேன் மக்களே..



பெங்களுரில் உள்ள நபருக்கு 4 நாட்களில் ஆஜராக வேண்டும் என அனுப்பிய சம்மனை..

இப்படி ஒரு சம்மனை யாரால் அனுப்ப முடியும் ..... 

இவரால் முடியும்...



மேலும் தகவலுக்கு அடுத்த பதிவில்......


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 







No comments:

Post a Comment