Tuesday, 29 March 2016

தினம் ஓரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண்டனைகள்



இ.த.ச 193 -

      யாராவது ஒருவர்,  நீதிமன்றத்தின் முன் கருத்துடனும் தெளிவுடனும் பொய்ச்சான்று அளிப்பவருக்கும், நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்குப் பொய்ச் சான்றினை உருவாக்குவோருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

    வேறு எவ்விதமான வகைகளில் பொய்ச் சான்று உருவாக்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


விளக்கம் 1-


     ஒர் சட்டப்படி அமைக்கப்பட்ட படை நீதி மன்றத்தில் நடைப்பெறும் விசாரனையை நீதிமன்ற விசாரனையாகவே கொள்ள வேண்டும்.

விளக்கம் 2-

     ஒர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்னதாகச் சட்டபூர்வமாக உத்தரவிடப்பட்ட ஆய்வினை நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாகக் கருதவேண்டும்.  அத்தகைய ஆய்வு ஒரு நீதிமன்றத்தில் நடைப்பெறவில்லையென்றாலும் கருத்தில் கொள்ளவேண்டும். அது ஒரு திருப்பாயத்தில் நடைப்பெற்றாலும்.




விளக்கம் 3-
  ஒர் நீதிமன்றத்தின் உத்திரவும் அங்கீகாரமும் பெற்று நடைப்பெறும் விசாரனையை, நீதிமன்ற விசாரனையின் ஒரு அங்கமாகவே கருதப்படவேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
 
உதாரணம் - A என்பவர் ஒரு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு அலுவர் முன்பு உண்மையைதான் கூறவேண்டும் என்ற கட்டாயம் இருக்க அவ்வாறே அவர் சத்தியப்பிரமானம் செய்ந்து தனக்கு தெரிந்த உண்மையான தகவலை தராமல் பொய்யான தகவலைத் தருவது குற்றமாகும். A என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய் சாட்சியம் அளித்ததாக கருதப்படும்.
 
 
Section 193- Punishment for false evidence


   Whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding, or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;

and whoever intentionally gives or fabricates false evidence in any other case, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

Explanation 1-A trial before a Court-martial; 1[* * *] is a judicial proceeding.

Explanation 2-An investigation directed by law preliminary to a proceeding before a Court of Justice, is a stage of a judicial proceeding, though that investigation may not take place before a Court of Justice.

Illustration

A, in an enquiry before a Magistrate for the purpose of ascertaining whether Z ought to be committed for trial, makes on oath a statement which he knows to be false. A this enquiry is a stage of a judicial proceeding, A has given false evidence.

Explanation 3-An investigation directed by a Court of Justice, according to law, and conducted under the authority of a Court of Justice, is a stage of a judicial proceeding, though that investigation may not take place before a Court of Justice.

Illustration

A, in any enquiry before an officer deputed by a Court of Justice to ascertain on the spot the boundaries of land, makes on oath a statement which he knows to be false. As this enquiry is a stage of a judicial proceeding. A has given false evidence.


*The words "or before a Military Court of Request" rep. by Act 13 of 1889. sec. 2 and Sch.
 
 
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment