Sunday, 29 November 2015

தினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமான கூட்டத்திற்கு அனுமதித்தால்



இ.த.ச 155

        யாராவது சட்டவிரோதமான ஒரு கூட்டம் கலகம் செய்கின்றது எனத் தெரிந்தும்.., அந்தக் கூட்டத்தின் கலகம் அந்த இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாகவோ அல்லது இடத்தின் உரிமையாளருக்கு உரிய உரிமையைப் பெற்றுத்தர நடைப்பெற்றாலும் அல்லது அத்தகைய கலகத்தின் மூலம் அந்த இடத்தின் உரிமையாளருக்கு சாதமாக ஒரு செயல் அல்லது அந்த இடத்தின் உரிமையாளரின் லாபத்திற்காக நடைப்பெற்றாலும் அதனை அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதிப்பது குற்றமாகும்.

         அந்த இடத்தின் சொந்தக்காரர் அதனைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்படி அந்த இடத்தின் சொந்தக்காரர் இல்லையென்றால் அவருடைய பிரதிநிதி அல்லது இடத்தின் உரிமையாளரின் மேலாளர் அந்த சட்டவிரோதமான கூட்டத்தை அடக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.


Section 155- Liability of person for whose benefit riot is committed
 
                 Whenever a riot is committed for the benefit or on behalf of any person who is the owner or occupier of any land, respecting which such riot takes place or who claims any interest in such land, or in the subject of any dispute which gave rise to the riot, or who has accepted or derived any benefit there from, 

                  such person shall be punishable with fine, if he or his agent of manage, having reason to believe that such riot was likely to be committed or that the unlawful assembly by which such riot was committed was likely to be held, shall not respectively use all lawful means in his or their power to prevent such assembly or riot from taking place, and for suppressing and dispersing the same.
 
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.      

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete