Wednesday, 8 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 274





     மருந்தாக பயன்படுத்தக்கூடிய பொருட்களுடன் தன்மையை விற்பனைக்கேன, அதனுடைய சக்தியையும், வீரியத்தை குறைக்கும் வகையில் கலப்படம் செய்வதும் , கெடுப்பதும் குற்றமாகும்.

      இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
 


Section 274 in The Indian Penal Code
    
    Adulteration of drugs.—Whoever adulterates any drug or medical preparation in such a manner as to lessen the efficacy or change the operation of such drug or medical preparation, or to make it noxious, intending that it shall be sold or used for, or knowing it to be likely that it will be sold or used for, any medicinal purpose, as if it had not undergone such adulteration, 
     shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 
[Source & Content http://indiankanoon.org/doc/261128/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 273



      யாராவது, கெட்டுப்போன பொருட்களை உணவாகவும் அல்லது குடிக்க பயன்படுத்தும் பானமாகவும் விற்பதும் அல்லது விற்பனைக்கு வைத்திருப்பதும் குற்றமாகும்.  

    இந்தக் குற்றத்திற்கு ஆறுமாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 273 in The Indian Penal Code

       
            Sale of noxious food or drink.—Whoever sells, or offers or exposes for sale, as food or drink, any article which has been rendered or has become noxious, or is in a state unfit for food or drink, knowing or having reason to believe that the same is nox­ious as food or drink, 
     Shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 
[Source & Content http://indiankanoon.org/doc/285163/]

Tuesday, 7 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 272


       
   

       உணவுப் பொருட்களில் அல்லது பருகும் பானத்தில் கலப்படம் செய்வதும் விற்பதும் குற்றமாகும். பொது மக்கள் அருந்துவதற்கு அல்லது பருகுவதற்கு விற்கப்படுவதும் தெரிந்தும் அத்தகைய பண்டங்களில்  கலப்படம் செய்து தொல்லை தருவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

      இதற்கு ஆறுமாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 272 in The Indian Penal Code
         Adulteration of food or drink intended for sale.—Whoever adulterates any article of food or drink, so as to make such article noxious as food or drink, intending to sell such article as food or drink, or knowing it to be likely that the same will be sold as food or drink, 
       shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 

நன்றி http://indiankanoon.org/doc/471092/

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 270




                          மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் தொத்து நோயைப் பரப்பக் கூடிய எந்த செயலையும் குற்ற மனதுடன் அல்லது தெளிவுடன் யார் புரிந்தாலும் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்




Section 270 in The Indian Penal Code
 
    Malignant act likely to spread infection of disease danger­ous to life.—Whoever malignantly does any act which is, and which he knows or has reason to believe to be, likely to spread the infection of any disease dangerous to life, 
 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1164731/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 271




          தொத்து நோய்கள் பரவி இருக்கும்பொழுது அல்லது பரவி இருக்கும் பிரதேத்திலிருந்து வருகின்ற அல்லது பரவக்கூடிய தொத்து நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி உள்ள கப்பலை எங்கும் செல்லதவாறு தடுத்து நிறுத்துவதற்குந என்று போடப்பட்டுள்ள எந்த உத்தரவையும், அத்தகைய உத்தரவு போடப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்தும் மீறி நடப்பது குற்றமாகும். அத்தகைய கப்பலில் உள்ள வரோடு அல்லது வேறு பகுதியில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதும் கொள்வதும் குற்றமாகும். 

      இந்த குற்றத்திற்கு ஆறு மாதம் சிறை தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டணையாக விதிக்கப்படும்.





Section 271 in The Indian Penal Code
     
            Disobedience to quarantine rule.—Whoever knowingly disobeys any rule made and promulgated 1[by the 2[***] Government 3[***] for putting any vessel into a state of quarantine, or for regulating the intercourse of vessels in a state of quarantine with the shore or with other vessels, or for regulating the intercourse between places where an infectious disease prevails and other places, 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both.

[Thanks & Source http://indiankanoon.org/doc/1726256/]

Monday, 6 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 269


     


       உயிர்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் தொற்றுநோயைப் பரப்பக்கூடிய அல்லது பரப்பக் கூடும் எந்தச் செயலையும் யாரும் செய்யக்கூடாது. 

    அப்படி அத்துமீறி அந்த செயலைப் செய்தவருக்கு ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்



Section 269 in The Indian Penal Code
  
     Negligent act likely to spread infection of disease danger­ous to life.—Whoever unlawfully or negligently does any act which is, and which he knows or has reason to believe to be, likely to spread the infection of any disease dangerous to life, 
   shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both. 

[Source & Content http://indiankanoon.org/doc/734195/]

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 268





     ஒருவர் செய்கின்ற ஒரு செயலால் பொதுமக்களுக்கு அல்லது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு அல்லது பொது மக்களின் உரிமைக்கு குந்தகம் அல்லது தீீங்கு அல்லது அபாயம் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்ப்பட்டால் அதனை பொதுத் தொல்லை என்று கூறுகிறோம். தனிப்பட்ட ஒரு மனிதனுக்குச் உபயோகமாகக் இருக்கின்றது என்ற காரணம் காட்டி எந்தப் தொல்லையையும் மன்னிக்க முடியாது அல்லது அனுமதிக்க முடியாது.


Section 268 in The Indian Penal Code
  Public nuisance.—A person is guilty of a public nuisance who does any act or is guilty of an illegal omission which causes any common injury, danger or annoyance to the public or to the people in general who dwell or occupy property in the vicinity, or which must necessarily cause injury, obstruction, danger or annoyance to persons who may have occasion to use any public right. A common nuisance is not excused on the ground that it causes some convenience or advantage.