Sunday, 21 February 2016

தினம் ஒரு சட்டம் - ஒரு உண்மையான ஆவணத்தை அழிக்க அல்லது உருக்கலைக்க நினைத்தால்

இ.த.ச 477

      யாராவது, பிறரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்று நேர்மையின்றி தனிப்பட்ட ஒருவரையோ அல்லது பொதுமக்களையோ ஏமாற்றவேண்டும் என்று கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும், 

    ஒரு ஆவணத்தை அல்லது உயிலை அல்லது தத்து எடுக்கும் அதிகாரம் அல்லது மதிப்புள்ள காப்பீட்டை ரத்து செய்வதும் அல்லது அழிப்பதும் அல்லது உருக்குலைப்பதும் அல்லது மறைப்பதும் அல்லது ரத்து செய்வதற்கும் அல்லது அழிப்பதற்கும் அல்லது உருக்குலைப்பதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும்.


      இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துதண்டனையாக விதிக்கப்படும்.

Section 477- Fraudulent cancellation, destruction, etc., of will, authority to adopt, or valuable security
 

    Whoever fraudulently or dishonestly, or with intent to cause damage or injury to the public or to any person, cancels, destroys or defaces, or attempts to cancel, destroy or deface, or secretes or attempts to secrete any document which is or purports to be a will, or an authority to adopt a son, or any valuable security, or commits mischief in respect of such document, 

    shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956)

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1937

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் - 2


இ.த.ச 476 - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் இ.த.ச பிரிவு 467 கீழ் அன்றி


   யாராவது பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்திற்கு அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்திற்கு அதிகாரப் பூர்வமாக உண்மையானது என தேவையான அச்சுகளையோ அல்லது வார்ப்புகளையோ அல்லது குறியீடுகளையோ போலியாக பதிப்பதும் அந்த ஆவணம் இ.த.ச பிரிவு 467 ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ள முறையில் அன்று வேறு ஒரு ஆவணத்தை பொய்யாக உருவாக்கி அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என்று உருவாக்குவதும் குற்றமாகும்,  

   அதற்கு தேவையான சாதனங்களையும், பொருட்களையும், குறியீடுகளை தம்வசம் வைத்திருப்பதும் அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 476- Counterfeiting device or mark used for authenticating documents or electronic record other than those described in Section 467, or possessing counterfeit marked material


   Whoever counterfeits upon, or in the substance of, any material, any device or mark used for the purpose of authenticating any *[document or electronic record], other than the documents described in Section 467 of this Code, intending that such device or mark shall be used for the purpose of giving the appearance of authenticity to any document or electronic record* then forged or thereafter to be forged on such material, or who with such intent, has in his possession any material upon or in the substance of which any such device or mark has been counterfeited, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "any document" (w.e.f. 17-10-2000). 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

Saturday, 20 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் - 1




இ.த.ச 475



   யாராவது பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்திற்கு அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்திற்கு தேவையான அச்சுகளையோ அல்லது வார்ப்புகளையோ அல்லது குறியீடுகளையோ போலியாக பதிப்பதும் அந்த ஆவணம் இ.த.ச பிரிவு 467 ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ள ஒர் ஆவணத்தை பொய்யாக உருவாக்கி அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என்று உருவாக்குவது குற்றமாகும்,  

   அதற்கு தேவையான சாதனங்களையும், பொருட்களையும், குறியீடுகளை தம்வசம் வைத்திருப்பதும் அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 475- Counterfeiting device or mark used for authenticating documents described in Section 467, or possessing counterfeit marked material


   
     Whoever counterfeits upon, or in the substance or, any material, any device or mark used for the purpose of authenticating any document described in Section 467 of this Code, intending that such device or mark shall be used for the purpose of giving the appearance of authenticity to any document then forged or thereafter to be forged on such material, or who, with such intent, has in his possession any material upon or in the substance of which any such device or mark has been counterfeited, 

    shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - பொய்யான ஆவணங்களை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வைத்திருந்தால்


இ.த.ச 474


     
      யாராவது, பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தை அல்லது ஒரு பொய்யான கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை,  அத்தகைய ஆவணம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் பிறரை வஞ்சிக்க வேண்டும் அல்லது ஏமாற்ற வேண்டும் என்று கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

    அத்தகைய ஆவணம் இ.த.ச பிரிவு 466 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ஆவணமாக இருப்பின், அதனை தம் பொருப்பில் வைத்திருப்பவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

அல்லது

    அத்தகைய ஆவணம் இ.த.ச பிரிவு 467 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ஆவணமாக இருப்பின், அதனை தம் பொருப்பில் வைத்திருப்பவருக்கு ஆயுள் தண்டனை வரை சிறைக்காவலுடன்  அபராதமும்  அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.



Section 474- Having possession of document described in Section 466 or 467, knowing it to be forged and intending to use it as genuine

     *[Whoever has in his possession any document or electronic record, knowing the same to be forge, and intending that the same shall fraudulently or dishonestly be used as genuine, shall, if the document or electronic record, is one of the description mentioned in section 466 of this Code], be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; and if the document is one of the description mentioned in section 467, shall be punished with **[imprisonment for life], or with imprisonment of either description, for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).

** Susb. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
 
 
 

Wednesday, 17 February 2016

தினம் ஒரு சட்டம் - போலி முத்திரைகளை உருவாக்குவதும் வைத்திருப்பதும் குற்றமாகும் - 2


இ.த.ச 473

         யாராவது , போலியாக ஒரு முத்திரை, தகடு அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த கருவியை உருவாக்கினாலும், அது அவருக்கு நன்றாக தெரியும் ஒரு ஏமாற்றுவதற்கும் அல்லது வஞ்சிப்பதற்கும் பயன்படுத்தடுகிறது அல்லது பயன்படுத்தக்கூடும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் தயாரிக்கப்படுகின்றது அல்லது அச்சிடப்படுகின்றது இது குற்றமாகும். 


       
         இந்தக் குற்றம் இ.த.ச பிரிவு 467 ன் கீழ் தண்டிக்கப்படும். அவ்வாறு இந்தக் குற்றம் இ.த.ச பிரிவு 467 ன் கீழ் கூறப்பட்டதைப் போல் இல்லாமல் வேறு பிரிவின் கீழ் தண்டிக்கப்பட கூடிய காரணங்களுக்காக அதை உருவாக்குவதும் அல்லது போலியாக உருவாக்கப்பட்ட பொருள் என தெரிந்தும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
 
 
        இதற்கு  ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 473- Making or possessing counterfeit seal, etc., with intent to commit forgery punishable otherwise

      Whoever makes or counterfeit any seal, plate or other instrument for making an impression, intending that the same shall be used for the purpose of committing any forgery which would be punishable under any section of this Chapter other than Section 467, or, with such intent, has in his possession any such seal, plate or other instrument, knowing the same to be counterfeit, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - போலி முத்திரைகளை உருவாக்குவதும் வைத்திருப்பதும் குற்றமாகும்


இ.த.ச 472

         யாராவது , போலியாக ஒரு முத்திரை அல்லது தகடு அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த கருவியை உருவாக்கினாலும், அது அவருக்கு நன்றாக தெரியும் ஒரு ஏமாற்றுவதற்கும் அல்லது வஞ்சிப்பதற்கும் பயன்படுத்த கூடும் அல்லது பயன்படுத்தபடும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் தயாரிக்கப்படுகின்றது அல்லது அச்சிடப்படுகின்றது இது குற்றமாகும். இந்தக் குற்றம் இ.த.ச பிரிவு 467 ன் கீழ் தண்டிக்கப்படும்.

அதாவது

இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துதண்டனையாக விதிக்கப்படும்.

மேலும்  அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட பொருள் என தெரிந்தும் அந்த பொருளை அல்லது முத்திரை அல்லது தகடை பிறரை  ஏமாற்றுவதற்கும் அல்லது வஞ்சிப்பதற்கும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும் 

      இதற்கு ஆயுள் சிறைத்தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 472- Making or possessing counterfeit seal, etc., with intent to commit forgery punishable under section 467


    Whoever makes or counterfeits any seal, plate or other instrument for making an impression, intending that the same shall be used for the purpose of committing any forgery which would be punishable under Section 467 of this Code, 

   or, with such intent, has in his possession any such seal, plate or other instrument, knowing the same to be counterfeit, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

Tuesday, 16 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யான ஆவணத்தை மோசடியாக பயன்படுத்தினால்


இ.த.ச 471

யாராவது, ஒரு பொய்யான ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை அது பொய்யானது எனத் தெரிந்தும் நேர்மையின்றி அல்லது மோசடி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் அதனை ஒரு உண்மையான ஆவணமாக பயன்படுத்துபவருக்கு, அந்த ஆவணத்தை பொய்யாக உருவாக்கியவருக்கு வழங்கப்படும் தண்டனையே விதிக்கப்படும்.

அதாவது ஒரு ஆவணத்தை பொய்யாக உருவாக்கினால் பின் வரும் சாரத்தை படிக்கவும்...


இ.த.ச 468

       

     யாராவது ஒருவர் , அடுத்தவரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் போலியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி அவரை வஞ்சிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் ஆவணம் உருவாக்குபவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 471- Using as genuine a forged document or electronic record

   Whoever fraudulently or dishonestly uses as genuine any *[document or electronic record] which he knows or has reason to believe to be a forged **[document or electronic record], shall be punished in the same manner as if he had forged such **[document or electronic record].

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000).

** Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-12000) 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.