Wednesday, 24 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 347


இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும். 


   இ.த.ச 347,  ஒரு நபரிடமிருந்து அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடமிருந்து, ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டைப் பலவந்தமாகப் பெறவேண்டும் என்ற கருத்துடன் அல்லது நபரை அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரை, சட்ட விரோதமான காரியத்தைப் புரிவதற்காக அல்லது குற்றச் செயல் புரிவதற்கான தகவலைப் பெறுவதற்காக, 
 
   முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன்    அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்








Section 347- Wrongful confinement to extort property, or constrain to illegal act

    Whoever wrongfully confines any person interested in the person confined, any property or valuable security or of constraining the person confined or any person interested in such person to do anything illegal or to give any information which may facilitate the commission of an offence, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine. 

Tuesday, 23 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 346


இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும். 


தினம் ஓரு சட்டம் - இ.த.ச 346 






       முறையற்றுச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபரைப் பற்றிய விவரம், அந்த நபரின் மீது அக்கறையுள்ள வேறு யாருக்கும் தெரியக்கூடாது அல்லது பொது ஊழியருக்குத் தெரியக்கூடாது என்ற கருத்துடன் அல்லது அந்த நபரை முறையற்றுச் சிறை வைத்திருக்கும் இடம். அந்த நபரிடம் அக்கறையுள்ள பிறருக்கு அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கும் தெரியக்கூடாது என்ற கருத்துடன் ரகசியமாகச் சிறை வைத்திருக்கும் நபருக்கும்,  

      இதற்கு முன் கூறப்பட்ட பிரிவு 344, 345 பிரிவுகளின் படி தண்டனை வழங்கப்படுவதுடன், அதற்கு அதிகப்படியான மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையைாக வழங்க வேண்டும்.





Section 346 in The Indian Penal Code


346. Wrongful confinement in secret.
      


     —Whoever wrongfully confines any person in such manner as to indicate an intention that the confinement of such person may not be known to any person inter­ested in the person so confined, or to any public servant, or that the place of such confinement may not be known to or discov­ered by any such person or public servant as herein before men­tioned, 
     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years in addition to any other punishment to which he may be liable for such wrongful confine­ment. 


Source http://indiankanoon.org/doc/559735/


தினம் ஓரு சட்டம் - இ.த.ச 345




இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 345

           ஒரு நபர் முறையற்றுத் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார், அந்த நபரை சிறையினின்று விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பிள்ளது அறிந்தும் அந்த நபரை  விடுவிக்காமல், முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு இ.த.ச 344 வது பிரிவின் படி அந்தக் குற்றத்திற்கு அவர் பெறத்தக்க தண்டனையை அனுபவிப்பதுடன், அதிகப்படியாக மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையைப் பெற வேண்டும்.




Section 345 in The Indian Penal Code
 
 
     345. Wrongful confinement of person for whose liberation writ has been issued.
 
    —Whoever keeps any person in wrongful confinement, knowing that a writ for the liberation of that person has been duly issued, shall be punished with imprisonment of either de­scription for a term which may extend to two years in addition to any term of imprisonment to which he may be liable under any other section of this Chapter. 
 
Source http://indiankanoon.org/doc/1814951/

Monday, 22 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 343 & 344



இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.








தினம் ஓரு சட்டம் - இ.த.ச 343



  
 மூன்று நாட்கள் அல்லது அதற்குமேல் எந்த நபரையும் முறையற்றுத் தடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபாராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 344


  
   பத்து நாட்கள் அல்லது அதற்குமேல் எந்த நபரையும் முறையற்றுத் சிறை வைப்பது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபாராதம் தண்டனையாக வழங்கப்படும்.









Section 343 in The Indian Penal Code
343. Wrongful confinement for three or more days.—Whoever wrong­fully confines any person for three days, or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.


 source http://indiankanoon.org/doc/589866/




Section 344 in The Indian Penal Code
344. Wrongful confinement for ten or more days.—Whoever wrongfully confines any person for ten days, or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine. 
Source http://indiankanoon.org/doc/1495318/ 


Sunday, 21 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 341 & இ.த.ச 342





இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.



இ.த.ச 341 


    எந்த நபரையும் முறையற்றுத் தடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரை வெறுங்காவல் அல்லது ஐந்நூறு ரூபாய் வரை அபாராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.





Section 341 in The Indian Penal Code
 
341. Punishment for wrongful restraint.—Whoever wrongfully restrains any person shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both. 
 
 

இ.த.ச 342

எந்த நபரையும் முறையற்றுத் சிறை வைப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது
இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.





 
Section 342 in The Indian Penal Code
 
342. Punishment for wrongful confinement.—Whoever wrongfully confines any person shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine which may extend to one thousand rupees, or with both. 
 
 
Source http://indiankanoon.org/doc/1243353/ 
 
 
 

Friday, 19 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 340


இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்



இ.த.ச 340 :

     ஒரு குறிப்பிட்ட வரம்பு(Limit) அல்லது எல்லையை(Border) மீறிச் செல்ல முடியாதப்படி ஒரு நபரைத், முறையற்று தடுப்பதை, முறையற்ற சிறையிடுதல்(Wrongful confinement) என்று கூறப்படுகின்றது





IPC 340:

Wrongful confinement

Whoever wrongfully restrains any person in such a manner as to prevent that person from proceeding beyond certain circumscribing limits, is said “wrongfully to confine” that person.
Illustrations
  1. A causes Z to go within a walled space, and locks Z. Z is thus prevented from proceeding in any direction beyond the circumscribing line of wall. A wrongfully confines z.
  2. A places men with firearms at the outlets of a building, and tells Z that they will fire at Z if Z attempts leave the building. A wrongfully confines Z.
source https://www.kaanoon.com/indian-law/ipc-340/

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 339







இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்
 

339. ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு உரிமைப் பெற்ற ஒரு நபரை, தன்னுச்சையாகத் தடுத்து அந்த திசையில் செல்ல விடாமால் நிறுத்துவதை முறையற்ற தடுப்பு என்று கூறப்படுகின்றது

விதிவிலக்கு
தண்ணீர் போக்குவரத்து அல்லது நிலத்தின் வழியாகத் தனிப்பட்டவர் பயன்படுத்தும் வழியைத் தடுக்கும் உரிமை, தனக்கு சட்டபூர்வமாக உண்டு என்று கருதித் தடுப்பது இந்தப் பிரிவில் அடங்காது. 


 339. Wrongful restraint.—Whoever voluntarily obstructs any person so as to prevent that person from proceeding in any direction in which that person has a right to proceed, is said wrongfully to restrain that person.

(Exception) —The obstruction of a private way over land or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct, is not an offence within the meaning of this section. Illustration A obstructs a path along which Z has a right to pass. A not believing in good faith that he has a right to stop the path. Z is thereby prevented from passing. A wrongfully restrains Z.