Showing posts with label பொய் வழக்கு. Show all posts
Showing posts with label பொய் வழக்கு. Show all posts

Thursday, 6 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 215 - காணமல் போனப் பொருளைத் கண்டுப்பிடிக்க பரிசுப் பெறுதல்





    யாராவது காணமல் போனப் பொருளை எடுத்துக் கொண்டு [ இந்த செயல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது] அல்லது கண்டுப்பிடித்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டும் அல்லது கண்டுப்பிடிக்கிறேன் என நடிப்பதும் , அவரிடமிருந்து அதற்காக பரிசு அல்லது சன்மானம் பெறுவதும் குற்றமாகும்.




    அப்படியில்லையெனில் அந்தக்குற்றத்தை புரிந்தவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் தவறினால் இரண்டான்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.





215. Taking gift to help to recover stolen property, etc.
 
  —Whoev­er takes or agrees or consents to take any gratification under pretence or on account of helping any person to recover any movable property of which he shall have been deprived by any offence punishable under this Code, 
      shall, unless he uses all means in his power to cause the offender to be apprehended and convicted of the offence, be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 
 Source http://indiankanoon.org/doc/1839996/

வார்த்தை விளக்கம்

gratification -மனநிறைவு
pretence - பாசாங்கு

apprehended - கைது

convicted - தண்டனை
imprisonment  - சிறை

Wednesday, 5 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 214 - குற்றவாளியின் அன்பளிப்பு





    யாராவது ஒருக்குற்றத்தை மறைப்பதற்காக அல்லது குற்றவாளியை தண்டனை அடையாமல் காப்பதற்காக அல்லது சட்டபூர்வமான தண்டனையை அவர் அடைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ஒருவருக்கு விலை மதிப்புள்ள பொருளை வழங்குவது , வழங்கும் படி மற்றவருக்கு சொல்வதும், அதற்கான ஏற்பாட்டை  செய்வதும் , அத்தகைய ஏற்பாட்டை செய்வதற்கு ஒத்துக்கொள்வதும் , இழந்த சொத்துக்களை மீட்டுத்தர ஏற்பாடு செய்வதும் குற்றமாகும்.

   அத்தகைய குற்றம் மரணத்தண்டனைக்  பெறத்தக்கதாக இருந்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம்  குற்றத்தை மறைத்தவருக்கு வழங்கப்படும்.
      அத்தகைய குற்றம் ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால்  குற்றத்தை மறைத்தவருக்கு மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய குற்றம் பத்து ஆண்டுகள் உட்பட்ட தண்டனையைப் பெறத்தக்கதாக இருந்தால் புரிந்திருந்தால் 
குற்றத்தை மறைத்தவருக்கு குற்றவாளிப்பெறும் தண்டனையில் நான்கில் ஒரு பங்கைச் சிறைக்காவலாகவும் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


விளக்கம் - குற்றவாளியும் பாதிக்கப்பட்டவரும் சமாதானமாக போகக்கூடிய குற்றங்கள் 213 மற்றும் 214 ஆகிய பிரிவுகளில் பொருந்தாது.


Section 214:- Offering gift or restoration of property in consideration of screening offender

 

Whoever gives or causes, or offers or agrees to give or cause, any gratification to any person, or restores or causes the restoration of any property to any person, in consideration of that person’ concealing an offence, or of his screening any person from legal punishment for any offence, or of his not proceeding against any person for the purpose of bringing him to legal punishment,

if a capital offence – shall, if the offence is punishable with death, be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;

if punishable with imprisonment for life, or with imprisonment – and if the offence is punishable with imprisonment for life or with imprisonment which may extend to ten years, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine;
and if the offence is punishable with imprisonment not extending to ten years, shall be punished with imprisonment of the description provided for the offence for a term which may extend to one-fourth part of the longest term of imprisonment provided for the offence, or with fine, or with both.

Exceptions
  1. The provisions of sections 213 and 214 do not extend to any case in which the offence may lawfully be compounded.

 

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 213 - குற்றவாளின் குற்றத்தை மறைத்தல்



     யாராவது ஒரு குற்றத்தை மறைப்பதற்காக அல்லது ஒரு குற்றவாளியைத் தண்டனைப் பெறாமல் காப்பாற்றுவதற்காக அல்லது சட்டப்படி தண்டனைப் பெற வேண்டிய ஒருவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பிறரிடம் தனக்காக அல்லது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு விலை மதிப்புள்ள ஒருப் பொருளை பெறுவதும், அந்தப் பொருளை  பெற முயற்சி செய்வதும் மற்றும் பெற சம்மதிப்பதும் குற்றமாகும்.

    அத்தகைய குற்றம் மரணத்தண்டனைக்  பெறத்தக்கதாக இருந்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம்  குற்றத்தை மறைத்தவருக்கு வழங்கப்படும்.

      அத்தகைய குற்றம் ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால்  குற்றத்தை மறைத்தவருக்கு மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.


    அத்தகைய குற்றம் பத்து ஆண்டுகள் உட்பட்ட தண்டனையைப் பெறத்தக்கதாக இருந்தால் புரிந்திருந்தால் 
குற்றத்தை மறைத்தவருக்கு குற்றவாளிப்பெறும் தண்டனையில் நான்கில் ஒரு பங்கைச் சிறைக்காவலாகவும் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

 








          
 Section 213:- Taking gift, etc., to screen an offender from punishment

        Whoever accepts or attempts to obtain, or agrees to accept, any gratification for himself or any other person, or any restitution of property to himself or any other person, in consideration of his concealing an offence or of his screening any person from legal punishment for any offence, or of his not proceeding against any person for the purpose of bringing him to legal punishment;

if a capital offence — shall, if the offence is punishable with death, be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;

if punishable with imprisonment for life, or with imprisonment — and if the offence is punishable with imprisonment for life, or with imprisonment which may extend to ten years, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine;

and if the offence is punishable with imprisonment not extending to ten years, shall be punished with imprisonment of the description provided for the offence for a term which may extend to one fourth part of the longest term of imprisonment provided for the offence, or with fine, or with both.