ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும்
ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக்கு உள்ளாக்கப்படுவார்
என்பதே சேதமில்லாத் தீங்கு அல்லது தீங்கு உண்டு சேதம் இல்லை
உதாரணம் - Ashby vs White (1703) 2 Ld Rayn 938 என்ற வழக்கில் வாதி Ashby
என்பவரி தேர்தலில் வாக்களிக்க சென்றார் ஆனால் தேர்தல் அதிகாரி பிரதிவாதி White அவர்கள்
வாதியை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டார்கள்.
அந்த தேர்தலில் வாதி வாக்களிக்காமல்
போனாலும் அந்த தேர்தலில் வாதி விரும்பிய வேட்பாளரே வெற்றியும் பெற்றார், இருந்தாலும் வாதி தனக்கு ஏற்ப்பட்ட மனஉளைச்சலுக்கும் இழப்பிட்டுக்கும் இழப்பிடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் நீதிமன்றம் தீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo என்ற சட்ட
முதுமொழியின் அடிப்படையில் பிரதிவாதி White அவர்களால் எவ்விதமான சேதம்
ஏற்படாவிட்டாலும் வாதியின் வாக்களிக்கும் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டுள்ளது எனவே வாதிக்கு
ஏற்பட்ட தீங்கிற்கு பிரதிவாதி பொறுப்பெறுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டாவது உதாரணம்
Asharfi Lal எதிர் The Municipal Board of Agra என்ற வழக்கில் வாதியின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட்டு போனது, வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட்டு போனது வாக்களரின் சட்ட உரிமைக்கு ஏற்பட்ட இழப்பாக கருதி வாதி Asharfi Lal அவர்களுக்கு சட்ட உரிமைக்கு ஏற்ப்பட்ட தீங்காக கருதி தீர்ப்பு வழங்கப்பட்டது .