Saturday, 5 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தல் கணக்குகளை வைத்திருக்க தவறினால்


இ.த.ச 171ஐ

      எவர் ஒருவர்  நிலுவையில் உள்ள சட்டத்தின் படி தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்திற்கு கணக்கு வைத்திருக்க வேண்டும் என இருக்கின்றது அவ்வாறு அவர் தேர்தல் சம்பந்தப்பட்ட வரவு மற்றும் செலவுக்கு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

      அவர் அத்தகைய கணக்குகள் சரிவர பேணாமல் வைத்திருந்தால் குற்றமாகும் இந்தக் குற்றத்திற்கு ஐந்நூறு ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


Section 171-I- Failure to keep election accounts
 

   
 Whoever being required by any law for the time being in force or any rule having the force of law to keep accounts of expenses incurred at or in connection with an election fails to keep such accounts 

   shall be punished with fine which may extend to five hundred rupees.
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தல்


இ.த.ச 171ஏ

        யாராவது ஒருவர், ஒரு சின்னத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக , தேர்தல் சம்பந்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் நடத்துவதும் அல்லது தேர்தலில் அந்த வேட்பாளருக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதும் அல்லது வேட்பாளருக்கு  ஆதரவாக செய்திகள் வெளியிடுவதும் அல்லது சுவரொட்டி ஒட்டுவதும் அல்லது அந்த வேட்பாளருக்கு ஆதரவு பெற்று தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அந்த வேட்பாளரின் அனுமதியின்றி தாமாக தம்முடைய பணத்தில் செலவு செய்யக்கூடாது.

அவ்வாறு செய்ந்தால் குற்றமாகும், இந்தக் குற்றத்திற்கு செலவு செய்த அந்த நபருக்கு ஐந்நூறு ரூபாய்க்கு அதிகப்படாத அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் யாராவது அந்த வேட்பாளரின் அனுமதியின்றி பத்து ருபாயோ அல்லது அதற்கு மேற்பாடாத ஒரு தொகையோ செலவிட்டிருந்தால் அவர் அத்தகையான செலவுக்கான அனுமதியை எழுத்து மூலம் பத்து நாட்களுக்குள் பெற்றுவிட்டால் அவர் மீது குற்றமாகாது.



Section 171-H- Illegal payments in connection with an election

     Whoever without the general or special authority in writing of a candidate incurs or authorizes expenses on account of the holding of any public meeting, or upon any advertisement, circular or publication, or in any other way whatsoever for the purpose of promoting or procuring the election of such candidate, shall be punished with fine which may extend to five hundred rupees:

      Provided that if any person having incurred any such expenses not exceeding the amount of ten rupees without authority obtains within ten days from the date on which such expenses were incurred the approval in writing of the candidate, he shall be deemed to have incurred such expenses with the authority of the candidate.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1611

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Thursday, 3 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்களைக் கூறுதல்

இ.த.ச 171எ

            எவர் ஒருவர்,   தேர்தலிலை சீர்குலைக்கும் அல்லது தேர்தலின் முடிவுகளை பாதிக்க கூடிய ஒரு தகவலை உருவாக்குவதும் அல்லது அதனை வெளியிடுவதும் அல்லது ஒரு பொய்யான தகவல் எனத் தெரிந்தும் அல்லது நம்புவதற்கு ஏதுவாக இருந்தும் அதில் நம்பகத்தன்மை இல்லை அல்லது உண்மை இல்லை எனத் தெரிந்தும் அதனை வெளியிடுவது குற்றமாகும், 

     எந்த ஒரு வேட்பாளரின், அவருடைய தனி மனித ஒழுக்கத்தைக் குறித்து தனிப்பட்ட முறையில் அவருடைய நடத்தைக் குறித்துத்தும் தகவல் வெளியிடுவதும் அல்லது உருவாக்குவதும்  குற்றமாகும்.

            இந்தக் குற்றத்திற்கு  அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 171-G- False statement in connection with an election

     Whoever with intent to affect the result of an election makes or publishes any statement purporting to be a statement of fact which is false and which he either knows or believes to be false or does not believe to be true, in relation to the personal character or conduct of any candidate shall be punished with fine.
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் முறைக்கேடுகள் செய்ந்தால்


இ.த.ச 171ஊ


      எவர் ஒருவர் தேர்தலில் தன்னுடைய செல்வாக்கை அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்ந்து வாக்களித்தாலோ குற்றமாகும்.

      இந்தக் குற்றத்திற்கு ஒராண்டு வரை சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 171-F- Punishment for undue influence or personation at an election
 
       Whoever commits the offence of undue influence of personation at an election shall be punished with imprisonment of either description for a term which may extend to one year or with fine, or with both.
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

Wednesday, 2 March 2016

தினம் ஒரு சட்டம் - அமில வீச்சும் அதற்கான தண்டனையும்




         அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.அதனால்  சமுக விரோதிகள் பெண்கள் மீது அமில வீச்சை சர்வ சாதாரணமாக செய்து வந்தார்கள். அதனால் இந்த புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதன் கீழ் அமிலம் வீசுபவர்களுக்கு ஐந்து ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை பரிந்துரைக்கப்பட்டன.

அதனை குறித்து கீழே காணலாம்...



இதச 326 - புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி 

       எவர் ஒருவர் பிறருக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஒரு பாதிப்பு அல்லது ஒரு குறைப்பாட்டை அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பையோ அல்லது காயம் அல்லது தீக்காயம் அல்லது மாற்றம் அல்லது குறைப்பாடு உடலுக்கோ அல்லது உடலின் ஒருப் பகுதிக்கோ ஒரு பாதிப்பை  ஏற்படுத்தும் அல்லது ஒருவருக்கு ஒரு கொடுங்காயத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் அமில வீச்சு செய்வதும் உட்படுத்துவதும் குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு தண்டனையாக பத்து ஆண்டுகள் வரையில் குறையாத சிறைக்காவல் தண்டனை அல்லது ஆயுள் முழுவதும் நீட்டிக்கப்பட கூடிய ஆயுள்தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். 



        விதிக்கப்படும் அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும் 

     அவரின் நலனுக்காகவும் கொடுக்கும் படி பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள விளக்கம் 1 மற்றும் விளக்கம் 2 கீழே உள்ள பிரிவில் காணலாம்

தகவல் மற்றும் நன்றி- வழக்கறிஞர் பாஸ்கர்

Thanks - https://www.facebook.com/groups/403720059836363/

IPC 326A: Whoever causes permanent or partial damage or deformity to, or burns or maims or disfigures or disables, any part or parts of the body of a person or causes grievous hurt by throwing acid on or by administering acid to that person, or by using any other means with the intention of causing or with the knowledge that he is likely to cause such injury or hurt, 


     shall be punished with imprisonment of either description for a term which shall not be less than ten years but which may extend to imprisonment for life, and with fine:

Provided that such fine shall be just and reasonable to meet the medical expenses of the treatment of the victim:

Provided further that any fine imposed under this section shall be paid to the victim.

Explanation 1.- For the purposes of ..... this section, "acid" includes any substance which has acidic or corrosive character or burning nature, that is capable of causing bodily injury leading to scars or disfigurement or temporary or permanent disability.

Explanation 2.- For the purposes of ..... this section, permanent or partial damage or deformity shall not be required to be irreversible.'.

https://en.wikipedia.org/wiki/Section_326_A_of_the_Indian_Penal_Code


இதச 326  - புதிய திருத்தம் 326B யின் படி 


    
          எவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு அல்லது குறைப்பாடு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அது குற்றமாகும்.

 மேலும் ஒருவருக்கு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகாமாகவோ ஒரு பாதிப்பு அல்லது குறைப்பாட்டை உண்டாக்குவது அல்லது ஒரு காயத்தை உண்டாக்குவது, அல்லது தீக்காயத்தை உண்டாக்குவது, அல்லது தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்குவது அல்லது ஊனத்தை உண்டாக்குவது அல்லது ஒரு கொடுங்காயத்தை உண்டாக்குவது

          அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 


விளக்கம் 1 -   இந்தப் பிரிவிலும் மற்றும்  இ.த.ச 326அ பிரிவிலும் அமிலம் என்பது ஒரு அமிலமோ அல்லது அதனை சார்ந்த ஒரு வேதியியல் பொருளாகவோ இருக்காலாம் அது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமோ ஆகும்.


விளக்கம் 2 - இந்தப் பிரிவிலும் மற்றும் இ.த.ச 326அ பிரிவிலும் கூறப்பட்டுள்ள நிரந்தரமான  அல்லது பகுதியான குறைப்பாடு அல்லது குறைப்பாடு என்பது திரும்ப பெறமுடியாத ஒரு உடலின் சேதத்தைக் குறிக்கும்.
தகவல் மற்றும் நன்றி- வழக்கறிஞர் பாஸ்கர்
Thanks - https://www.facebook.com/groups/403720059836363/ 

IPC 326B: Whoever throws or attempts to throw acid on any person or attempts to administer acid to any person, or attempts to use any other means, with the intention of causing permanent of partial damage or deformity of burns or maiming or disfigurement or disability or grievous hurt to that person,

      shall be punished with imprisonment of either description for a term which shall not be less than five years, but which may extent to seven years and also be liable to fine.

Explanation 1.- For the purposes of section 326 A and this section, "acid" includes any substance which has acidic or corrosive character or burning nature, that is capable of causing bodily injury leading to scars or disfigurement or temporary or permanent disability.

Explanation 2.- For the purposes of section 326 A and this section, permanent or partial damage or deformity shall not be required to be irreversible.'.

 https://en.wikipedia.org/wiki/Section_326_B_of_the_Indian_Penal_Code


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் லஞ்சம் கொடுத்தால் என்ன தண்டனை


இ.த.ச 171உ

        யாராவது, தேர்தலில் ஒட்டளிக்க பணம் அல்லது பொருள் கொடுத்தால் அது லஞ்சம் கொடுத்ததாக கருதப்படும்,  லஞ்சம்  கொடுத்தால் அது குற்றமாகும்.

      அவருக்கு ஒராண்டுக்குட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

      அவ்வாறு ஒருவர்  தேர்தலில்  லஞ்சத்தை உணவாகவோ அல்லது தின்பண்டமாகவோ அல்லது பொழுதுபோக்கு சமாச்சாரமாகவோ கொடுத்தால் அவருக்கு வெறும் அபராதம் மட்டும் தண்டனையாக வழங்கப்படும்.



Section 171-E- Punishment for bribery
 

   Whoever commits the offence of bribery shall be punished with imprisonment of either description for a term which may be extend to one year, or with fine, or with both:

Provided that bribery by treating shall be punished with fine only.

Explanation-"Treating" means that form of bribery where the gratification consists in food, drink, entertainment, or provision.
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் கள்ள ஒட்டு மற்றும் ஆள் மாறாட்டம் செய்வதும்


இ.த.ச 171ஈ

        யாராவது, தேர்தலில் ஒட்டளிக்கும் போது ஒட்டுத்தாளிலும் அல்லது வாக்கு சீட்டிலும் பிறருடை பெயரில் ஒட்டளித்தாலும், அந்த நபர் இறந்திருந்தாலும் அல்லது கற்பனைப் பெயராக இருந்தாலும் குற்றமாகும்.


        மேலும் ஒருவர் தன்னுடைய பெயரில் ஒருமுறை வாக்களித்து விட்டு மேலும் ஒரு முறை வாக்களிப்பதும் அல்லது பிறருடைய பெயரில் வாக்களிப்பதும் அல்லது ஒட்டுப் போட முயற்சிப்பதும் குற்றமாகும். இதை செய்வது தேர்தலில் ஆள்மாறட்டம் செய்ததாக கருதப்படும். இவ்வாறு செய்வதற்கு ஆட்களைப் பிடிப்பதும் அல்லது ஆட்களை பிடிக்க முயற்சிசெய்வதும் அல்லது இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமாகும்.

        [இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளவைகள் அந்த நேரத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சட்டத்தால் தனக்கு பதில் ஒருவர் வாக்களிக்கலாம் என ஒருவரை நியமிக்கும் போது இந்தப் பிரிவில் அடங்காது. எவ்வாறு எனில் ஒருவரால் சரியான பார்வை இல்லாமல் இருக்கலாம் அவரால் சரிவர ஒட்டளிக்க இயலாது அப்போது நிலுவையில் உள்ள சட்டம் அனுமதிக்கும் என்றால் இந்தப் பிரிவின் கீழ் அது குற்றமாகாது.]




Section 171-D- Personation at elections
Whoever at an election applies for a voting paper or votes in the name of any other person, whether living or dead, or in a fictitious name, or who having voted once at such election applies at the same election for a voting paper in his own name, and whoever abets, procures or attempts to procure the voting by any person in any such way, commits the offence or personation at an election.

*[Provided that nothing in this section shall apply to a person who has been authorised to vote as proxy for an elector under any law for the time being in force in so far as he votes as a proxy for such elector.]

* Ins. by Act 24 of 2003, sec. 5.
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.