Tuesday, 16 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணம் நற்பெயரைக் கெடுக்க


இ.த.ச 469

யாராவது ஒருவர், மற்றோருவரின் நன்னடத்தைக்கும் நற்பெயருக்கும் கேடு உண்டாக்க வேண்டும் அல்லது அத்தகைய கேடு உண்டாகும் என தெளிவாகவும் தெரிந்து புரிந்தும் கருத்துடனும் எண்ணத்துடனும் ஒரு பொய் ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உண்டாக்குவது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

 இ.த.ச 470

    பொய் ஆவணம் அல்லது கணினிச் சார்ந்த பொய் ஆவணம் என்பது முழுவதும் அல்லது அதின் ஒரு பகுதி மட்டும் பொய்யாக உண்டாக்கப்பட்ட ஆவணத்தை குறிக்கும்

Section 470- Forged document or electronic record
 
    A false **[document or Electronic Record] made wholly or in part by forgery is designated "a forged *[document or electronic record]".

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000).

** Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-12000)

தினம் ஒரு சட்டம் - நற்பெயரைக் கெடுக்க பொய் ஆவணம் புரிந்தால்


இ.த.ச 469

       யாராவது ஒருவர், மற்றோருவரின் நன்னடத்தைக்கும் நற்பெயருக்கும் கேடு உண்டாக்க வேண்டும் அல்லது அத்தகைய கேடு உண்டாகும் என தெளிவாகவும் தெரிந்து புரிந்தும் கருத்துடனும் எண்ணத்துடனும் ஒரு பொய் ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உண்டாக்குவது குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 469- Forgery for purpose of harming reputation
 

  Whoever commits forgery, *[intending that the document or Electronic Record forged] shall harm the reputation of any party, or knowing that it is likely to used for that purpose, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "intending that the documetn forged" (w.e.f. 17-10-2000) 

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1929

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

Monday, 15 February 2016

தினம் ஒரு சட்டம் - ஒருவரை ஏமாற்ற வேண்டும் என பொய்யாக ஆவணங்களை உருவாக்குதல்


இ.த.ச 468

      யாராவது ஒருவர் , அடுத்தவரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் பொய்யாக ஒரு ஆவணத்தை அல்லது பொய்யாக  ஒரு  கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உருவாக்கி,

     அதன் மூலம் அவரை ஏமாற்றி வஞ்சிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் எண்ணத்துடனும் ஆவணம் உருவாக்குபவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 468- Forgery for purpose of cheating

    Whoever commits forgery, intending that the *[document or Electronic Record forged] shall be used for the purpose of cheating, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-2000)
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - போலியாக மதிப்புள்ள காப்பீடு அல்லது உயிலை போலியாக உருவாக்கினால்


இ.த.ச 467


யாராவது போலியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி அத்தகைய ஆவணம் ஒரு காப்பிட்டு அல்லது உயில் அல்லது தத்து எடுக்கும் அதிகாரம் அல்லது ஒரு சொத்தை விற்பதற்கு கொடுக்கும் பவர் ஏஜன்ட் அல்லது காப்பிட்டின் மூலம் பெறப்படும் அசல் அல்லது வட்டி அல்லது டிவைடன்ட் அல்லது ஏதாவது வழி வகையில் பணத்தை பெறுவதற்கும் அல்லது சொத்தை பெறுவதற்கும், காப்பிட்டை பெறுவதற்கும், அல்லது ஒரு ஆவணத்தின் மூலம் போலியாக சான்று அளித்து பணத்தை பெறுவதற்கும் அல்லது ஒருவர் ஒரு மதிப்புள்ள பொருளை அல்லது சொத்தை பெற்றுக் கொண்டதாக போலியாக சான்றளித்து ஒரு ஆவணத்தை உருவாக்குவதும் குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துதண்டனையாக விதிக்கப்படும்.


Section 467- Forgery of valuable security, will, etc.

Whoever forges a document which purports to be a valuable security or a will, or an authority to adopt a son, or which purports to give authority to any person to make or transfer any valuable security, or to receive the principal, interest or dividends thereon, or to receive or deliver any money, moveable property, or valuable security, or any document purporting to be an acquittance or receipt acknowledging the payment of money, or an acquittance or receipt for the delivery of any moveable property or valuable security, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1927
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - நீதிமன்றம் அல்லது பொது பதிவேட்டில் பதியக்கூடிய ஒரு தகவலை போலியாக உருவாக்கினால்

இ.த.ச 466

     யாராவது ஒரு பொய் ஆவணம் அல்லது கணினி சம்பந்தப்பட்ட பொய்  ஆவணத்தில் பொய் தகவல்களை வைத்து உருவாக்குவதும் அல்லது போலியான ஆவணங்களை தயாரிப்பதும் குற்றமாகும், 


   
  அத்தகையக ஆவணங்களை  ஒரு நீதி மன்றத்தில் சமர்பிக்கலாகும் அவ்வாறு பெறப்படும் ஆவணத்தின் காரணமாக ஒரு நீதியை தவறாகவும் வழங்கப்படலாம் அல்லது பொது பதிவேட்டில் பதியக்கூடிய காரியங்களான ஒரு பிறப்பு அல்லது இறப்பு அல்லது திருமணம் அல்லது மதமாற்றம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை போலி ஆவணங்களை மூலம் பதிவதும்  அல்லது பொய்யான தகவல் கொடுத்து பதிவதும் அல்லது போலியான தகவல் கொடுத்து பதிவு சான்று பெறுவதும் குற்றமாகும் அதன் காரணமாக ஒரு பொது ஊழியர் தவறாக ஒரு நடவடிக்கையையும் எடுக்கலாகும் இதுவும் குற்றமாகும்.

ஆகையால் இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.


Section 466- Forgery of record of court or of public register, etc.
*[Whoever forges a document or an electronic record], purporting to be a record or proceeding of or in a Court of Justice, or a register of birth, baptism, marriage or burial, or a register kept by a public servant as such, or a certificate or document purporting to be made by a public servant in his official capacity, or an authority to institute or defend a suit, or to take any proceedings therein, or to confess judgment, or a power of attorney, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

*[Explanation. - For the purposes of this section, "register" includes any list, data or record of any entries maintained in the electronic form as defined in clause (r) of sub-section (1) of section 2 of the Information Technology Act, 2000.]

*Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "Whoever forges a document" (w.e.f. 17-10-2000) 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Sunday, 14 February 2016

தினம் ஒரு சட்டம் - போலி ஆவணங்களை உருவாக்குதல் என்றால் என்ன......?

இ.த.ச 464



    ஒருவர் போலியாக அல்லது பொய்யான ஒரு ஆவணத்தை அல்லது போலியான கணினி சம்பந்தமான ஒரு ஆவணத்தை உருவாக்கிவிட்டான் என எப்போது கூறப்படுகின்றது எனில்,,,

1 - அவர் நீதி நேர்மையற்ற முறையில் பிறரை ஏமாற்ற வேண்டும் என

அ - ஒரு போலி ஆவணத்தை உருவாக்குவதும் அல்லது அந்தப் பத்திரத்திற்கு தேவையான ஒரு பகுதியை உருவாக்குவதும், அத்தகைய ஆவணத்தில் கையோப்பம் இடுவதும், அதில் முத்திரை இடுவதும் அதை விற்பதும்

ஆ - ஒரு போலியான கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உருவாக்குவதும் அல்லது அல்லது அதில் ஒரு பகுதியை உண்டாக்குவதும் அல்லது அதனை உண்மையானது என அனுப்புவதும்

இ - ஒரு போலியான  கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தில் ஒரு பொய்யான டிஜிட்டர் சைன் என்கிற முத்திரையை இடுவதும்

ஈ - ஒரு போலியான  கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தில் உண்மையானது போன்ற தோற்றத்தை உண்டாக்குவதும் - அல்லது அது உண்மையானது என சான்றளிப்பதும்..


இத்தகைய செயல்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தை அல்லது இத்தகைய செயல்களின் மூலம் உருவாக்கப்பட்ட கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உண்மையானது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்குவது அதன் மூலம் ஒருவரை நம்ப செய்ந்து ஒருவரை கையோப்பம் இட வைப்பதும், முத்திரை இடவைப்பதும், விற்கவைப்பதும் அல்லது வாங்க வைப்பதும் அல்லது அதனை அனுப்புவதும் அல்லது ஒருவர் பேரில் அதனை அனுப்புவதும் அல்லது அவர் கையோப்பம் இடாத அல்லது முத்திரை இடாத அல்லது விற்காத அல்லது வாங்காத அல்லது அதன் மீது கூறாத ஒன்றை கூறியதாக கூறி மாற்றுவதும்..,

2 -சட்டப்படி நியமிக்கப்படாத ஒருவர் , தாமோ அல்லது பிறரோ உருவாக்கிய ஒரு ஆவணத்தை, அதிலுள்ள முக்கியமான சாரத்தை,  மற்றோருவரை நியாயமின்றி ஏமாற்றவேண்டும் அல்லது தான் பலன் பெற வேண்டும் என எந்த ஒரு ஆவணத்தை மாற்றுவதும் அல்லது அதனை ரத்து செய்வதும்..,

 
3 -யாராவது பிறரை ஏமாற்றவேண்டும் என ஒரு போலியான ஆவணம் அல்லது கணினி சார்ந்த ஒரு ஆவணத்தை தயாரித்து அதில் சுயநினைவு இல்லாத அல்லது போதையில் என்ன செய்வது என்ற தெளிவும் இல்லாத ஒருவரிடம் ஒரு ஆவணத்தில் கையேழுத்து இட செய்வதும் 

ஒரு ஆவணத்தை போலியாக உருவாக்குதல் ஆகும்.


Section 464- Making a false document


1[A person is said to make a false document or false electronic record-

First-Who dishonestly or fraudulently-

(a) Makes, signs, seals or executes a document or part of a document;

(b) Makes or transmits any electronic record or part of any electronic record;

(c) Affixes any digital signature on any electronic record;

(d) Makes any mark denoting the execution of a document or the authenticity of the digital signature,

With the intention of causing it to be believed that such document or part of document, electronic record or digital signature was made, signed, sealed, executed, transmitted or affixed by or by the authority of a person by whom or by whose authority he knows that it was not made, signed, sealed, executed or affixed; or

Secondly- Who, without lawful authority, dishonestly or fraudulently, by cancellation or otherwise, alters a document or an electronic record in any material part thereof, after it has been made, executed or affixed with digital signature either by himself or by any other person, whether such person be living or dead at the time of such alteration; or

Thirdly- Who dishonestly or fraudulently causes any person to sign, seal, execute or alter a document or an electronic record or to affix his digital signature on any electronic record knowing that such person by reason of unsoundness of mind or intoxication cannot, or that by reason of deception practised upon him, he does not know the contents of the document or electronic record or the nature of the alterations.]


Illustrations

(a) A has a letter of credit upon B for rupees 10,000 written by Z. A, in order to defraud B, adds a cipher to the 10,000, and makes the sum 1,00,000 intending that it may be delivered by B that Z so wrote the letter. A has committed forgery.

(b) A, without Z's authority affixes Z's seal to document purporting to be a conveyance of an estate from Z to A, with the intention of selling the estate to B, and thereby of obtaining from B the purchase-money. A has committed forgery.

(c) A picks up a cheque on a banker signed by B, payable to bearer, but without any sum having been inserted in the cheque. A fraudulently fills up the cheque by inserting the sum of ten thousand rupees. A commits forgery.

(d) A leaves with B, his agent, a cheque on a banker, signed by A, without inserting the sum payable and authorizes B to

http://www.indianlawcases.com/act-Indian.Penal.Code,1860-1924

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - போலி அல்லது பொய் ஆவணம் புனைந்தால் என்ன தண்டனை.


இ.த.ச 465

     யாராவது, போலி அல்லது பொய் ஆவணம் புனைந்தால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.



Section 465- Punishment for forgery
 


   Whoever commits forgery shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 

 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.