Monday, 4 January 2016

தினம் ஒரு சட்டம் - மரணம் மற்றும் கொலைக் குற்றத்திற்கான தண்டனைகள்-2


இ.த.ச 304


       யாராவது கொலைக் குற்றமாகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தைப் (culpable homicide) புரிந்தால், அவருக்கு அந்தக் குற்றத்தின் மூலம் அவர் நினைத்தவருக்கு ஒரு மரணத்தை உண்டாக்கும்  அல்லது அத்தகைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற கருத்து அல்லது தெளிவுடன் அந்த செயலைப் புரிந்திருந்தால்.
  
  அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படுவதுடன். அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும்

   யாராவது கொலைக் குற்றமாகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தைப் (culpable homicide) புரிந்தால், அவருக்கு அந்தக் குற்றத்தின் மூலம் அவர் நினைத்தவருக்கு ஒரு மரணத்தை உண்டாக்கும்  உடல்காயத்தை உண்டாக்குவதால் அல்லது அத்தகைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற கருத்து இல்லாமல் அல்லது தெளிவும் இல்லாமல் அந்த செயலைப் புரிந்திருந்தால்.
  
  அவருக்கு  பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
அல்லது அபராதம் மட்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 304- Punishment for culpable homicide not amounting to murder
 


  Whoever commits culpable homicide not amounting to murder shall be punished with *[imprisonment for life ],or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine, if the act by which the death is caused is done with the intention of causing death, or of causing such bodily injury as is likely to cause death,

Or with imprisonment of either description for a term which may extend to ten years, or with fine, or with both, if the act is done with the knowledge that it is likely to cause death ,but without any intention to cause death, or to cause such bodily injury as is likely to cause death.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (W.e.f.1-1-1956). 




குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment