Saturday, 23 January 2016

தினம் ஒரு சட்டம் - தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும்



இ.த.ச 349 : தாக்குதல்(Force)

         ஒரு நபர் மற்றோரு நபரை தாக்குதல் செய்ந்ததாக கூறப்படுகிறது எப்போது எனில், 

    ஒருவருடைய உடலை அசைப்பதும், அசையாமல் தடுப்பதும்  அல்லது அசைவில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதும் அல்லது  ஒரு பொருளை அசைத்து, அல்லது அந்தப் பொருளை அசையாமல் தடுத்து அல்லது அதனுடைய அசைவில் மாற்றத்தை உண்டாக்குவது ஆகியவற்றின் மூலம் அந்தப் பொருள் மற்றோருவருடைய அசைவில் மற்றத்தை உண்டாக்கலாம் அல்லது அவரின் உடலின் ஒருப் பகுதி அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடை அல்லது வைத்திருக்கும் பொருள் அல்லது அவருடைய உணர்வைத் தொடக்கூடிய ஒரு பொருளைத் தொடுவதும் எடுப்பதும் என எதனைப் புரிந்தாலும்  அந்த நபர் தாக்குதல் செய்கிறார் என்று கூறலாம்.


அந்த நபர் அத்தகைய அசைவு, அசைவில் மாற்றம் அல்லது அசைவைத் தடுக்கும் செயல் கீழ் காணப்படும் மூன்று வகைகளில் இருக்கும்.

1. தன்னுடைய உடற்பலத்தைப் பயன்படுத்தி 
மேற் கூறப்பட்ட செயலை  நடத்தலாம்.

2. ஒரு பொருளை அசைப்பதன் மூலம் மேற் கூறப்பட்ட செயலை உண்டாக்கலாம்.

3.ஒரு மிருகத்தை ஏவி விட்டு அத்தகைய மாற்றத்தை உண்டாக்கலாம் அல்லது மாற்றத்தை அல்லது அசைவை நிறுத்தலாம்.



 
இ.த.ச 350 : வன்முறைத் தாக்குதல்(Criminal Force)

   யாராவது ஒருவருடைய சம்மதமின்றி அவருடைய அசைவுகளை கட்டுப்படுத்துவது தாக்குதல் என்கிறோம், அவ்வாறு அவரைத் தாக்கும் போது ஒரு குற்றத்தைப் புரிய வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய தாக்குதல் காயம், அச்சம் அல்லது தொல்லை தர வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடனும் அத்தகைய தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.

இ.த.ச 351 :தாக்க முனைதல்(Assault)

ஒருவர் தம் எதிரிலுள்ள மற்றோருவரை வன் முறையில் தாக்கப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு தோற்றத்தை அல்லது ஒர் ஆயத்தமோ செய்தால், அதனை வன்முறையில் தாக்க முனைதல் என்று கூறுகிறோம்.

விளக்கம்

வெறும் வாய் வார்த்தை மட்டும் இந்தக் குற்றத்திற்கு உட்படுத்தாது. ஆனால் அவனுடைய சைகை அல்லது ஆயத்தமும் அந்தப் பேச்சு தரும் பொருள் அதனை வன்முறையில் தாக்க முனைதலாக கருதும்.


இ.த.ச 503 : குற்றங்கருதி மிரட்டுதல்(Criminal intimidation)

         யாராவது, ஒருவருடைய அல்லது அவருக்கு வேண்டிய ஒருவருடைய உடலுக்கும், மதிப்புக்கும் மற்றும் சொத்துக்கும் தீங்கு இழைக்கப்படும் என ஒருவரை மிரட்டுவதும் அல்லது ஒருவர் சட்டப்படி செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருக்கும் படி மிரட்டுவதும் அல்லது சட்டப்படி செய்யக்கூடாத ஒரு செயலை செய்யும்படி மிரட்டுவதும் குற்றங்கருதி மிரட்டுதல் என்கிறோம்.


விளக்கம்

   நமக்கு வேண்டிய நபர் எனப்படுபவர் இறந்து விட்டாலும் அவருடைய நற் பெயருக்கு கலங்கம் விளைவிக்கப்படும் என மிரட்டுவதும் இந்தப் பிரிவில் அடங்கும்.



 

நாளை இதற்கான தண்டனைகளைக் காண்போம்....

 http://indiankanoon.org/doc/478590/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment