Monday, 18 January 2016

தினம் ஒரு சட்டம் - மரணத்தை விளைவிக்க முயற்சித்த குற்றத்திற்கான தண்டனைகள்



இ.த.ச 308

    யாராவது ஒருவர் தம் செயலால் மற்றவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் எண்ணத்துடனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலால் அவருக்கு மரணம் விளைந்தால் அது மரணத்தை விளைவிக்கும் குற்றமாகும் (IPC 304),

 குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படுவதுடன். அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

     அவ்வாறு அவருக்கு மரணம் சம்பவிக்கவில்லை என்றால் குற்றவாளிக்கு மரணத்தை விளைவிக்கும் முயற்சி செய்ந்தற்காக  தண்டனை வழங்கப்படும் ஆதாவது IPC/இதச 308 வது பிரிவின் படி மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.  

அந்த செயலின் விளைவாக யாருக்காவது காயம் ஏற்பட்டால் , குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


உதாரணம் - ரமேஷ் மற்றும் சுரேஷூக்கும் ஒரு பிரச்சனை, ரமேஷ் கடும் சினம் ஊட்டப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு சுரேசை சுடுகிறான் ஆனால் குண்டு சுரேசை சுடாமல் அந்த வழியாக சென்ற சதீஷை துளைக்கிறது. இங்கு சதீஷ் இறந்தால் ரமேஷ் மீது கொலைக்குற்றம்(Murder) சாராத மரணத்தை விளைவித்த குற்றம்(culpable homicide) சாரும். ஆனால் சதீஷ் இறக்கவில்லை சிறு காயத்துடன் தப்பித்தால் ரமேஷ் மீது மரணத்தை விளைவிக்க முயற்ச்சித்த குற்றம்( Attempt to culpable homicide) சாரும். 




Section 308- Attempt to commit culpable homicide
 
  Whoever does any Act with such intention or knowledge and under such circumstances that, if he by that Act caused death, he would be guilty of culpable homicide not amount to murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both, 

     and if hurt is caused to any person by such Act, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

Illustration

A, on grave and sudden provocation, fires a pistol at Z, under such circumstances that if he thereby caused death he would be guilty of culpable homicide not amounting to murder. A has committed the offence defined in this section.
 
நன்றி
 

  http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-308-300x300.png

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

2 comments: