இ.த.ச 352 : தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் அதற்கான தண்டனை
யாராவது பிறரைத் தாக்க முனைந்தாலும், வன் முறைத் தாக்குதலில் ஈடுப்பட்டாலும் குற்றமாகும். (ஒருவர் திடிரென கோபமுட்டபட்ட நிலையில் அதனைப் புரிவது இந்தப் பிரிவின் கீழ் வராது)
இந்தக் குற்றத்திற்கு மூன்று மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.
இ.த.ச 353: பொது ஊழியரை அவர் கடமையை செய்ய விடாமல் தாக்குதல்
ஒரு பொது ஊழியர், சட்டப்படி தமக்குள்ள கடமையைச் செய்ய வரும் போது, அப்படிச் கடமையாற்ற விடாமல் அவரைத் தடுக்க வேண்டும் அல்லது தாமதிக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படிக் கடமையாற்றுவதன் விளைவாக அல்லது அப்படி கடமையாற்ற முயலும் போதோ அவரிடத்தில் வன் முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதலைப் பயன்படுத்துவது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.
இ.த.ச 354 : பெண்னை தாக்குதல்
ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன், அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஒரண்டுக்குக்கு குறையாமால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் கூடிய அபராதம் இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இ.த.ச 506 குற்றங்கருதி மிரட்டுதலுக்கான தண்டனை
குற்றங்கருதி மிரட்டுதல் என்ற குற்றத்தை யார் புரிந்தாலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
அத்தகைய மிரட்டல் மூலம் ஒரு கொலை செய்யப்படும் என்றோ அல்லது பெரிய கொடுங்காயம் விளைவிக்கப்படும் என்றோ அல்லது தீயிட்டு சொத்துகள் அழிக்கப்படும் என்றோ அல்லது மரணத்தண்டனை பெறத்தக்க அல்லது ஆயுள் தண்டனையை பெறத்தக்க ஒரு குற்றத்தைப் புரியப்படும் என மிரட்டினால்,
மிரட்டிய அந்த நபர் குற்றங்கருதி மிரட்டுதல் என்ற குற்றத்தைப் புரிந்தவர் ஆகிறார். அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1973
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.