நலமானதை சிந்திப்போம் நல்லதை செய்வோம்...நல்லதை பார்ப்போம்.....
நம்முடைய சமுகத்தில் புகைப்பிடித்தலும், குடித்தலும் மட்டுமே குற்றம் அதனை பயன்படுத்தும் போதும் மட்டும் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளிலிலும் குடி நாட்டுக்கும் வீட்டிற்கும் உடலுக்கும் கேடு என விளம்பர படுத்தப்படுகின்றது...
புகைப்பிடித்தலும்...........
குடித்தலும்............மட்டுமே அல்ல....
ஆனால் சமுகத்திற்கு அதனை விட கேடு விளைவிக்கும் எத்தனையோ நாடகங்களும், சினிமா வன்முறை காட்சிகளும் அமைந்துள்ளன அதனை திரையிடும் நிறுவனங்களும், காட்சி அமைப்பவரும் அது குற்றம் எனவும் எந்தகைய தண்டனை எனவும் அதில் வெளியிட வேண்டும்,
இதனால் மட்டுமே குற்றத்தை தடுக்கவும், சட்ட விழிப்புனர்ச்சியை உண்டாக்கவும் முடியும் மத்திய மாநில அரசுகள் இத்தகைய கோரிக்கைகளை ஏற்று நல்ல சமுகத்தி உருவாக்க வேண்டும்....
எவ்வாறு எனில்.... ஒரு தற்கொலைக்கும் முயலும் போதும் அல்லது கொலை செய்ய முயலும் போதும் அதன் அடியில் அல்லது வேறு சில வகைகளில் இது குற்றம் என காண்பிக்க படவேண்டும்....
உதாரணமாக யாராவது தற்கொலை செய்ய முயலும் போது அதில் கீழ் கண்டவாறு பிரசுரிக்க வேண்டும்
இ.த.ச 309 - யாராவது தற்கொலை செய்து கொள்வதற்கு முயறச்சித்தாலும் அது தொடர்பான ஏதாவது ஒரு செயலைப் புரிந்து முயற்ச்சித்தாலும் அது தற்கொலை முயற்சியாக கருதப்படும். இது சட்டப்படி குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
பொருப்புறுதி - பொதுமக்களின் நலன் கருதியும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் , யாரையும் குறை குற்றம் சுமத்தும் எண்ணத்திலும் அல்ல, என சான்று உரைக்கின்றேன்.