Wednesday, 12 October 2016

இந்திய அரசியலமைப்பு சாசனம் - 166 என்ன சொல்கின்றது...




இந்திய அரசியலமைப்பு சாசனம் 166 – மாநில அரசின் அலுவல் பணிகள் குறித்து 




(1) ஒரு மாநிலத்தின் எல்ல நிர்வாகத்தையும் அந்த மாநிலத்தின் ஆளுநரின் பெயரால் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும்.


  (2) ஒரு மாநிலத்தின் ஆளுநரின் பெயரால் அறிவிக்கப்படும் கட்டளைகளும் அல்லது வேறு ஆவணங்களும் ஒரு மாநிலத்தின் ஆளுநரின் உத்தரவுப்படி அதனை எவ்வாறு உண்மை என சான்றளிக்கவும், உத்தரவு அளிக்கவும் விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே உறுதி செய்யப்பட வேண்டும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட கட்டளை அல்லது வேறு ஆவணங்களும் உண்மையானவை அல்ல என்று யாரும் கேள்வி கேட்கமுடியாது அல்லது மறுக்க முடியாது.


(3) ஒரு மாநிலத்தின் ஆளுநர் தமக்கு எனில் இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியபடி அந்த மாநிலத்தின் அரசு பணிகளை தக்க வகையில் செயல்படுத்துவதற்கு விதிமுறைகளை உருவாக்கவும், மேலும் அமைச்சர்களுக்கு அந்த பணிகளை ஒதுக்கிடு செய்வதற்கும் விதிமுறைகள் வகுக்கலாம், அது எவ்வாறு எனில் இந்திய அரசியலமைப்பு சாசன முறைப்படி வகுக்கப்படவேண்டும்.

(4) நீக்கப்பட்டது.


பொருப்புறுதி - Disclaimer, எளிதாக பொது மக்களுக்கு சட்டம் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றது, இதனை மட்டுமே சட்ட விளக்கமாக கொள்ளக்கூடாது.. மேலும் இத்துடன் இனைத்துள்ள இந்திய அரசியலமைப்பு சாசன சட்ட விளக்க படங்களையும் காணவும்.

No comments:

Post a Comment