Wednesday, 24 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 348



இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.





இ.த.ச 348:-   

      ஒரு நபரிடமிருந்து அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடமிருந்து, ஒர் ஒப்புதல் வாக்குமூலத்தை அல்லது ஒரு குற்றத்தை அல்லது ஒழுங்கீனத்தைக் கண்டுப்பிடிப்பதற்கான தகவலை நிர்ப்பந்தித்துப் பெறவேண்டும் என்ற கருத்துடன், அந்த நபரை முறையற்றுச் சிறை  வைத்திருப்பதும், அந்த நபரிடம் இருந்து அல்லது
அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடம் இருந்து, ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டை மீட்பதற்காக அல்லது ஒரு தேவை அல்லது உரிமையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அல்லது ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டைப் மீட்பதற்கான தகவலைப் பெறுவதற்காக, 

     அந்த நபரை முறையற்றுச் சிறை வைத்திருப்பது குற்றமாகும்.

       முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன்  அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.





IPC 348: Section 348 of the Indian Penal Code

Wrongful confinement to extort confession, or compel restoration of property

      Whoever wrongfully confines any person for the purpose of extorting from the person confined or any person interested in the person confined any confession or any information which may lead to the detection of an offense or misconduct, or for the purpose of constraining the person confined or any person interested in the person confined to restore or to cause the restoration of any property or valuable security or to satisfy any claim or demand, or to give information which may lead to the restoration of any property or valuable security, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

Source https://www.kaanoon.com/indian-law/ipc-348/

No comments:

Post a Comment