Tuesday, 30 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 354


இ.த.ச 349 - 358 வரை தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் அதன் தண்டனையும்.



இ.த.ச 354 : பெண்னை தாக்குதல்


ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன், அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். 

     இந்தக் குற்றத்திற்கு ஒரண்டுக்குக்கு குறையாமால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் கூடிய  அபராதம் இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.





IPC 354 Assault or criminal force to woman with intent to outrage her modesty

     Whoever assaults or uses criminal force to any woman, intending to outrage or knowing it to be likely that he will there by outrage her modesty, 

     shall be punished with imprisonment of either description for a term which shall not be less than one year but which may extend to five years, and shall also be liable to fine1.


Source http://devgan.in/ipc/section/354/

Monday, 29 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 352 & 353




இ.த.ச 349 - 358 வரை தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் : தண்டணைகளும்



 இ.த.ச 352

 பிறரைத் தாக்க முனைந்தாலும், வன் முறைத் தாக்குதலில் ஈடுப்பட்டாலும் குற்றமாகும். (தீடிரென கோபமுட்டபட்ட நிலையில் அதனைப் புரிவது இந்தப் பிரிவின் கீழ் வராது)

இந்தக் குற்றத்திற்கு மூன்று மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

விளக்கம் -
 
1-தானே வலிய போய் ஒரு குற்றத்தை செய்ந்து அதனால் கடுஞ்சினம் உண்டானால், இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது

2-சட்டப்பூர்வமான முறையில் ஒரு காரியம் ஒரு பொது ஊழியரால் செயல்படுத்தப்படுகின்றது அப்போது அந்த செயலால் கடுஞ்சினம் உண்டானால், இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது

3-சட்டப்படி ஒருவர் தனக்குரிய தற்காப்புபை பயன்படுத்துகிறார் அப்போது அவரின் செயலால்
கடுஞ்சினம் உண்டானால், இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது.




 இ.த.ச 353

ஒரு பொது ஊழியர், சட்டப்படி தமக்குள்ள கடமையைச் செய்ய வரும் போது, அப்படிச் கடமையாற்ற விடாமல் அவரைத் தடுக்க வேண்டும் அல்லது தாமதிக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படிக் கடமையாற்றுவதன் விளைவாக அல்லது அப்படி கடமையாற்ற முயலும் போதோ அவரிடத்தில் வன் முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதலைப் பயன்படுத்துவது குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.






IPC 352 : Punishment for assault or criminal force otherwise than on grave provocation:


     Whoever assaults or uses criminal force to any person otherwise than on grave and sudden provocation given by that person, 


    shall be punished with imprisonment of either description for a term which may extend to three months, or with fine which may extend to five hundred rupees, or with both.


Explanations
  1. Grave and sudden provocation will not mitigate the punishment for an offence under this section, if the provocation is sought or voluntarily provoked by the offender as an excuse for the offence, or
  2. if the provocation is given by anything done in obedience to the law, or by a public servant, in the lawful exercise of the powers of such public servant, or
  3. if the provocation is given by anything done in the lawful exercise of the right of private defence.


Section 353:- Assault or criminal force to deter public servant from discharge of his duty

 

    Whoever assaults or uses criminal force to any person being a public servant in the execution of his duty as such public servant, or with intent to prevent or deter that person from discharging his duty as such public servant, or in consequence of anything done or attempted to be done by such person to the lawful discharge of his duty as such public servant, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.



 Thanks & Source, Image  http://www.indianpenalcode.in/ipc-353/



தினம் ஓரு சட்டம் - இ.த.ச 351



இ.த.ச 349 - 358 வரை தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் :



இ.த.ச 351 :தாக்க முனைதல்(Assault)




     ஒருவர் தம் எதிரிலுள்ள மற்றோருவரை வன் முறையில் தாக்கப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு தோற்றத்தை அல்லது ஒர் ஆயத்தமோ செய்தால், அதனை வன்முறையில் தாக்க முனைதல் என்று கூறுகிறோம்.

விளக்கம்

வெறும் பேச்சி மட்டும் இந்தக் குற்றத்திற்கு உட்படாது. ஆனால் அவனுடைய சைகை அல்லது ஆயத்தமும் அந்தப் பேச்சு தரும் பொருள் அதனை வன்முறையில் தாக்க முனைதலாக கருதும்.




    ஒருவர் மீது அவருடைய அனுமதியின்றி நாயை ஏவி விட வேண்டும் அவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் அல்லது அச்சம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் நாயை கட்டவிழ்த்து விட முனைகிறான் அதனை தாக்க முனைதல் என்று கூறலாம்.



Section 351 Assault.
 351. Assault.—Whoever makes any gesture, or any preparation intending or knowing it to be likely that such gesture or prepa­ration will cause any person present to apprehend that he who makes that gesture or preparation is about to use criminal force to that person, is said to commit an assault. 
Explanation.—Mere words do not amount to an assault. But the words which a person uses may give to his gestures or preparation such a meaning as may make those gestures or preparations amount to an assault. 
Illustrations
(a) A shakes his fist at Z, intending or knowing it to be likely that he may thereby cause Z to believe that A is about to strike Z, A has committed an assault.

(b) A begins to unloose the muzzle of a ferocious dog, intending or knowing it to be likely that he may thereby cause Z to believe that he is about to cause the dog to attack Z. A has committed an assault upon Z.

(c) A takes up a stick, saying to Z, “I will give you a beating”. Here, though the words used by A could in no case amount to an assault, and though the mere gesture, unaccompanied by any other circumstances, might not amount to an assault, the gesture ex­plained by the words may amount to an assault. 

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 350



இ.த.ச 349 - 358 வரை தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் :



இ.த.ச 350 :வன்முறைத் தாக்குதல்


         ஒருவருடைய சம்மதமின்றி அவரைத் தாக்கும் போது ஒரு குற்றத்தைப் புரிய வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய தாக்குதல் காயம், அச்சம் அல்லது தொல்லை தர வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடனும் அத்தகைய தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.

எடுத்துக்காட்டு:




    ஒருவர் மீது அவருடைய அனுமதியின்றி நாயை ஏவி விட்டு அவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் அல்லது அச்சம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் இந்தத் தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.



I.P.C 350 : Criminal Force

     Whoever intentionally uses force to any person, without that person’s consent, in order to the committing of any offence, or intending by the use of such force to cause, or knowing it to be likely that by the use of such force he will cause injury, fear or annoyance to the person to whom the force is used, is said to use criminal force to that other.

Illustrations

    A incites a dog to spring upon Z, without Z’ consent. Here, if A intends to cause injury, fear or annoyance to Z, he uses criminal force to Z.


தகவல் http://devgan.in/ipc/index.php?q=350&a=1

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 349



தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும் :



இ.த.ச 349 :

       ஒருவருடைய உடலை அசைப்பதும், அசையாமல் தடுப்பதும், அல்லது அசைவில் மாற்றத்தை உண்டாக்குவதும் ஒரு பொருளை அசைத்து, அசையாமல் தடுத்து அல்லது அதனுடைய அசைவில் மாற்றத்தை உண்டாக்குவது ஆகியவற்றின் மூலம் அந்தப் பொருள் ஒருவருடைய உடலின் ஒருப் பகுதி அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடை அல்லது வைத்திருக்கும் பொருள் அல்லது அவருடைய உணர்வைத் தொடக்கூடிய ஒரு பொருளைத் தொடுவதும் ஆகியவற்றில் எதனைப் புரிந்தாலும் அந்த நபர் தாக்குதல் செய்கிறார் என்று கூறலாம்.


அந்த நபர் அத்தகைய அசைவு, அசைவில் மாற்றம் அல்லது அசைவைத் தடுக்கும் செயல், கீழ் காணப்படும் மூன்று வகைகளில் இருக்கும்.

1. தன்னுடைய உடல் பலத்தைப் பயன்படுத்தி அத்தகைய செயல் நடக்கலாம்.

2. ஒரு பொருளை அசைப்பதன் மூலம் மேற் கூறப்பட்ட அசைவினை உண்டாக்கலாம்.

3.ஒரு மி்ருகத்தை ஏவி விட்டு அத்தகைய மாற்றத்தை உண்டாக்கலாம் அல்லது மாற்றத்தை அல்லது அசைவை நிறுத்தலாம்



IPC - 349 : Force

A person is said to use force to another if he causes motion, change of motion, or cessation of motion to that other, or if he causes to any substance such motion, or change of motion, or cessation of motion as brings that substance into contact with any part of that other’s body, or with anything which that other is wearing or carrying, or with anything so situated that such contact affects that other’s sense of feeling;

Provided that the person causing the motion, or change of motion, or cessation of motion, causes that motion, change of motion, or cessation of motion in one of the three ways hereinafter described:
  1. By his own bodily power.
  2. By disposing any substance in such a manner that the motion or change or cessation of motion takes place without any further act on his part, or on the part of any other person.
  3. By inducing any animal to move, to change its motion, or to cease to move.

Sunday, 28 June 2015

தினம் ஓரு சட்டம் : தீர்வழிகள் - முறையற்ற தடுப்பும் சிறைவைப்பும்.


தீர்வழிகள் - முறையற்ற தடுப்பு மற்றும் முறையற்ற சிறைவைப்புக்கும்.


தீர்வழிகள் 1. தற்காப்பு (Self Defence)



        முறையற்று சிறைவைப்பில் இருக்கும் நபர் அதிலிருந்து தப்புவதற்காக தன் சுய பலத்தை உபயோத்து தப்பிக்கலாம், அதிலிருந்து தப்புவதற்காக போதுமான பலத்தை மட்டும் உபயோகிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பலத்தை உபயோகிப்பது தாக்குதலாக கருதப்படும் ( Battery or Force - Sec 349 Of IPC).



தீர்வழிகள் 2. ஆட்கொணர்விக்கும் நீதிப்பேரணை ( Writ of Habeas Corpus )



      முறையற்று சிறைவைப்பில் இருக்கும் நபரை நீதிமன்றத்தின் முன்பாக முன்னிலைப்படுத்துமாறு கோரி, அவரோ அல்லது அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள், உயர் நீதி மன்றத்திலோ(ஷரத்து/Article 226) அல்லது உச்ச நீதி மன்றத்திலோ (ஷரத்து/Article 32)  ஆட்கொணர்விக்கும் நீதிப்பேரணை மனுவை சமர்ப்பிக்கலாம் நமக்கு ஷரத்து 21 மற்றும் ஷரத்து  22 வழங்கியுள்ள உரிமைகளின் படி.

 ஷரத்து 21 - Article 21 in The Constitution Of India 1949

21. Protection of life and personal liberty No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law.
 
 ஷரத்து 22 - Article 22 in The Constitution Of India 1949
 
22. Protection against arrest and detention in certain cases
(1) No person who is arrested shall be detained in custody without being informed, as soon as may be, of the grounds for such arrest nor shall he be denied the right to consult, and to be defended by, a legal practitioner of his choice
(2) Every person who is arrested and detained in custody shall be produced before the nearest magistrate within a period of twenty four hours of such arrest excluding the time necessary for the journey from the place of arrest to the court of the magistrate and no such person shall be detained in custody beyond the said period without the authority of a magistrate
(3) Nothing in clauses ( 1 ) and ( 2 ) shall apply (a) to any person who for the time being is an enemy alien; or (b) to any person who is arrested or detained under any law providing for preventive detention
(4) No law providing for preventive detention shall authorise the detention of a person for a longer period than three months unless (a) an Advisory Board consisting of persons who are, or have been, or are qualified to be appointed as, Judges of a High Court has reported before the expiration of the said period of three months that there is in its opinion sufficient cause for such detention:
(5) When any person is detained in pursuance of an order made under any law providing for preventive detention, the authority making the order shall, as soon as may be, communicate to such person the grounds on which the order has been made and shall afford him the earliest opportunity of making a representation against the order
(6) Nothing in clause ( 5 ) shall require the authority making any such order as is referred to in that clause to disclose facts which such authority considers to be against the public interest to disclose
(7) Parliament may by law prescribe
(a) the circumstances under which, and the class or classes of cases in which, a person may be detained for a period longer than three months under any law providing for preventive detention without obtaining the opinion of an Advisory Board in accordance with the provisions of sub clause (a) of clause ( 4 );
(b) the maximum period for which any person may in any class or classes of cases be detained under any law providing for preventive detention; and
(c) the procedure to be followed by an Advisory Board in an inquiry under sub clause (a) of clause ( 4 ) Right against Exploitation
 

தீர்வழிகள் 3. இழப்பீடு கோரி வழக்கிடுதல்


முறையற்று சிறைவைப்பினால் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு ஏற்ப்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி பிரதிவாதியின் மீது வழக்கிடலாம்.


வழக்கு விபரம் : Case Details

Bhim Singh V/S State Of Jammu & Kashmir ( AIR 1986 SC 494)

Source : http://indiankanoon.org/doc/1227505/

Wednesday, 24 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 348



இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.





இ.த.ச 348:-   

      ஒரு நபரிடமிருந்து அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடமிருந்து, ஒர் ஒப்புதல் வாக்குமூலத்தை அல்லது ஒரு குற்றத்தை அல்லது ஒழுங்கீனத்தைக் கண்டுப்பிடிப்பதற்கான தகவலை நிர்ப்பந்தித்துப் பெறவேண்டும் என்ற கருத்துடன், அந்த நபரை முறையற்றுச் சிறை  வைத்திருப்பதும், அந்த நபரிடம் இருந்து அல்லது
அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடம் இருந்து, ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டை மீட்பதற்காக அல்லது ஒரு தேவை அல்லது உரிமையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அல்லது ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டைப் மீட்பதற்கான தகவலைப் பெறுவதற்காக, 

     அந்த நபரை முறையற்றுச் சிறை வைத்திருப்பது குற்றமாகும்.

       முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன்  அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.





IPC 348: Section 348 of the Indian Penal Code

Wrongful confinement to extort confession, or compel restoration of property

      Whoever wrongfully confines any person for the purpose of extorting from the person confined or any person interested in the person confined any confession or any information which may lead to the detection of an offense or misconduct, or for the purpose of constraining the person confined or any person interested in the person confined to restore or to cause the restoration of any property or valuable security or to satisfy any claim or demand, or to give information which may lead to the restoration of any property or valuable security, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

Source https://www.kaanoon.com/indian-law/ipc-348/

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 347


இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும். 


   இ.த.ச 347,  ஒரு நபரிடமிருந்து அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடமிருந்து, ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டைப் பலவந்தமாகப் பெறவேண்டும் என்ற கருத்துடன் அல்லது நபரை அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரை, சட்ட விரோதமான காரியத்தைப் புரிவதற்காக அல்லது குற்றச் செயல் புரிவதற்கான தகவலைப் பெறுவதற்காக, 
 
   முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன்    அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்








Section 347- Wrongful confinement to extort property, or constrain to illegal act

    Whoever wrongfully confines any person interested in the person confined, any property or valuable security or of constraining the person confined or any person interested in such person to do anything illegal or to give any information which may facilitate the commission of an offence, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine. 

Tuesday, 23 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 346


இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும். 


தினம் ஓரு சட்டம் - இ.த.ச 346 






       முறையற்றுச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபரைப் பற்றிய விவரம், அந்த நபரின் மீது அக்கறையுள்ள வேறு யாருக்கும் தெரியக்கூடாது அல்லது பொது ஊழியருக்குத் தெரியக்கூடாது என்ற கருத்துடன் அல்லது அந்த நபரை முறையற்றுச் சிறை வைத்திருக்கும் இடம். அந்த நபரிடம் அக்கறையுள்ள பிறருக்கு அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கும் தெரியக்கூடாது என்ற கருத்துடன் ரகசியமாகச் சிறை வைத்திருக்கும் நபருக்கும்,  

      இதற்கு முன் கூறப்பட்ட பிரிவு 344, 345 பிரிவுகளின் படி தண்டனை வழங்கப்படுவதுடன், அதற்கு அதிகப்படியான மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையைாக வழங்க வேண்டும்.





Section 346 in The Indian Penal Code


346. Wrongful confinement in secret.
      


     —Whoever wrongfully confines any person in such manner as to indicate an intention that the confinement of such person may not be known to any person inter­ested in the person so confined, or to any public servant, or that the place of such confinement may not be known to or discov­ered by any such person or public servant as herein before men­tioned, 
     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years in addition to any other punishment to which he may be liable for such wrongful confine­ment. 


Source http://indiankanoon.org/doc/559735/


தினம் ஓரு சட்டம் - இ.த.ச 345




இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 345

           ஒரு நபர் முறையற்றுத் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார், அந்த நபரை சிறையினின்று விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பிள்ளது அறிந்தும் அந்த நபரை  விடுவிக்காமல், முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு இ.த.ச 344 வது பிரிவின் படி அந்தக் குற்றத்திற்கு அவர் பெறத்தக்க தண்டனையை அனுபவிப்பதுடன், அதிகப்படியாக மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையைப் பெற வேண்டும்.




Section 345 in The Indian Penal Code
 
 
     345. Wrongful confinement of person for whose liberation writ has been issued.
 
    —Whoever keeps any person in wrongful confinement, knowing that a writ for the liberation of that person has been duly issued, shall be punished with imprisonment of either de­scription for a term which may extend to two years in addition to any term of imprisonment to which he may be liable under any other section of this Chapter. 
 
Source http://indiankanoon.org/doc/1814951/

Monday, 22 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 343 & 344



இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.








தினம் ஓரு சட்டம் - இ.த.ச 343



  
 மூன்று நாட்கள் அல்லது அதற்குமேல் எந்த நபரையும் முறையற்றுத் தடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபாராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 344


  
   பத்து நாட்கள் அல்லது அதற்குமேல் எந்த நபரையும் முறையற்றுத் சிறை வைப்பது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபாராதம் தண்டனையாக வழங்கப்படும்.









Section 343 in The Indian Penal Code
343. Wrongful confinement for three or more days.—Whoever wrong­fully confines any person for three days, or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.


 source http://indiankanoon.org/doc/589866/




Section 344 in The Indian Penal Code
344. Wrongful confinement for ten or more days.—Whoever wrongfully confines any person for ten days, or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine. 
Source http://indiankanoon.org/doc/1495318/ 


Sunday, 21 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 341 & இ.த.ச 342





இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.



இ.த.ச 341 


    எந்த நபரையும் முறையற்றுத் தடுப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரை வெறுங்காவல் அல்லது ஐந்நூறு ரூபாய் வரை அபாராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.





Section 341 in The Indian Penal Code
 
341. Punishment for wrongful restraint.—Whoever wrongfully restrains any person shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both. 
 
 

இ.த.ச 342

எந்த நபரையும் முறையற்றுத் சிறை வைப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது
இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.





 
Section 342 in The Indian Penal Code
 
342. Punishment for wrongful confinement.—Whoever wrongfully confines any person shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine which may extend to one thousand rupees, or with both. 
 
 
Source http://indiankanoon.org/doc/1243353/ 
 
 
 

Friday, 19 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 340


இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்



இ.த.ச 340 :

     ஒரு குறிப்பிட்ட வரம்பு(Limit) அல்லது எல்லையை(Border) மீறிச் செல்ல முடியாதப்படி ஒரு நபரைத், முறையற்று தடுப்பதை, முறையற்ற சிறையிடுதல்(Wrongful confinement) என்று கூறப்படுகின்றது





IPC 340:

Wrongful confinement

Whoever wrongfully restrains any person in such a manner as to prevent that person from proceeding beyond certain circumscribing limits, is said “wrongfully to confine” that person.
Illustrations
  1. A causes Z to go within a walled space, and locks Z. Z is thus prevented from proceeding in any direction beyond the circumscribing line of wall. A wrongfully confines z.
  2. A places men with firearms at the outlets of a building, and tells Z that they will fire at Z if Z attempts leave the building. A wrongfully confines Z.
source https://www.kaanoon.com/indian-law/ipc-340/