Tuesday, 29 December 2015

தினம் ஒரு சட்டம் - மரணத்தை எதிர்பாராமல் மற்றோருவர் மீது செயல்படுத்தினால்.


இ.த.ச 301


      ஒரு நபர், தம் செயலால் ஒரு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் தெரிந்து ஒரு செயல் செய்யப்படுகிறது. 

     அந்த செயலில் விளைவாக அவர் நினைத்த ஒரு நபருக்கு மரணம் சம்பவிக்காமல்  அவரின் செயலால் வேறு நபருக்கு மரணம் சம்பவிக்கின்றது.

         ஆனால் கொலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கும் கொலையுண்டான நபருக்கும் எந்த விதமான விரோதமும் இல்லை அவரை கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் இல்லை தம் செயலால் அவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவும் இல்லை. 

         ஆகவே மரணத்தை விளைவித்தவருக்கு மரணத்தை விளைவித்த குற்றமே சாரும்.  கொலைக் குற்றம் சாராது.

     இனி வரும் பதிவுகளில் மரணத்தை விளைவித்த குற்றத்திற்கும் மற்றும் கொலைக் குற்றம் உள்ள வேறுப்பாட்டைக் காண்போம்.


Section 301- Culpable homicide by causing death of person other than person whose death was intended
 
     If a person, by doing anything which he intends or knows to be likely to cause death, commits culpable homicide by causing the death of any person, whose death he neither intends nor knows himself to be likely to cause, 

     the culpable homicide committed by the offender is of the description of which it would have been if he had caused the death of the person whose death he intended or knew himself to be likely to cause. 



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

1 comment: