இ.த.ச 157
யாராவது ஒரு சட்டவிரோதமான ஒரு கூட்டத்திற்கு புகலிடம் கொடுப்பது தவறாகும். யாரவது ஒரு கூட்டம் அவர்கள் சட்டவிரோதமான கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்லது அவர்கள் சட்டவிரோதமான கூட்டத்திற்காக அமர்த்தப்பட்டவர்கள் என்று நம்புவதற்கு ஏதுவான காரணங்கள் இருந்தும் அவர்களை தங்க அனுமதிப்பது குற்றமாகும்.
அவர்கள் சட்ட விரோதமான கூட்டத்தினர் அல்லது அவர்கள் சட்டவிரோதமான கூட்டத்திற்காக அமர்த்தப்பட்டவர்கள் என அறிந்தப்பின்பும் அவர்களை வரவேற்பதும், தம்முடைய இடத்தில் அவர்களை ஒன்று கூட அனுமதிப்பதும், அவர்களுக்கு புகலிடம் தருவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
157-
Harbouring persons hired for an unlawful assembly
Whoever harbours, receives or assembles, in
any house or premises in his occupation or charge, or under his control
any persons, knowing that such persons have been hired, engaged or
employed, or are about to be hired, engaged or employed, to join or
become members of an unlawful assembly,
shall be punished with
imprisonment of either description for a term which may extend to six
months, or with fine, or with both.
றிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
சட்டம் பற்றிய தகவல்களை தொகுத்து புரியும் வகையில் தருவது பாராட்டுக்குரியது. பயனுள்ள பதிவுகள் தொடர்கிறேன்.
ReplyDelete