Tuesday, 18 April 2017

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் - 2009



நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிப்பது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்

100% இலவச கல்வி அளிக்க வேண்டிய அரசுகள் இன்று கண் துடிப்பாக RTE
எனப்படும் கட்டாய கல்வி சட்டத்தை இயற்றயுள்ளது
 2011 ம் ஆண்டு முதல் இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி - இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் மெட்ரிக் மற்றும் CBSE / ICSE பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் எதுவும் இன்றி 8-ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயிலுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய மாநில அரசாங்கங்கள் செலுத்திவிடும்.
- இச்சட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கென தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெற்றோர்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகூடங்கள் ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.

- எந்தெந்த பள்ளிகளில் சேர்க்கலாம்? - அனைத்து மெட்ரிக், CBSE/ICSE தனியார் சுயநிதி பள்ளிகள் (சுயநிதி சிறுபான்மை பள்ளி நீங்கலாக),

- LKG மற்றும் முதல் வகுப்பு - ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள். - ஆறாம் வகுப்பு - மூன்று  கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்

- விண்ணப்பங்கள் எங்கு பெறலாம்? - பள்ளி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம்  மற்றும் துவக்க கல்வி அலுவலகம்.


மேலும் பல தகவல்களுக்கு - http://tnmatricschools.com/rte/rtepdf.aspx



- விண்ணப்பிக்க கடைசி நாள்: 18. 05. 2017
யாரெல்லாம் பயன்பெற முடியும்?
- 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நலிந்த பிரிவைச்
சேர்ந்தவர்களின் குழந்தைகள், அனாதைகள், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி , பி.சி வகுப்பினர், திருநங்கைகள், எச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர், துப்புரவாளர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளின் குழந்தைகள்.

தேவையான ஆவணங்கள் என்ன?
- வருமான சான்றிதழ், 

- சாதிச் சான்றிதழ் மற்றும் 
- பிறப்பு சான்றிதழ்.

- மேலதிக விபரம் மற்றும் புகார்களுக்கு:- Directorate of Matriculation Schools
- தொலைபேசி: 044 - 28270169
- SMS: 9442144401, 9443574633
E-mail : dmschennai2010@gmail.com


தகவல்கள் - http://rowtiram.blogspot.in/2015/06/blog-post_42.html

No comments:

Post a Comment