Friday, 29 July 2016

தினம் ஒரு சட்டம் - இரவில் ஒளிந்து வீடுப் புகுதல்


இ.த.ச 444

 மனிதன் வாழ்வதற்கு குடும்பம் நடத்துவதற்கும் வசிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு பெற்றவருக்கும் தெரியாமலும், குற்றங்கருதி  இரவில் வீடு புகுதலை மறைந்திருந்து மேற்க்கொண்டால் அதாவது சூரிய மறைவுக்குப் பிறகும் சூரிய உதயத்துக்கு முன்னும் மேற்க்கொண்டால்,, அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி இரவில்  ஒளிந்து வீடுப் புகுதல்  ( Lurking house-trespass by night )  என்கிறோம்.

 
http://image.slidesharecdn.com

Section 444- Lurking house-trespass by night


    Whoever commits lurking house-trespass after sunset and before sunrise, is said to commit "lurking house-trespass by night".
Thanks to  http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1900

 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

 

 

 

Tuesday, 26 July 2016

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 443 - ஒளிந்து வீடுப் புகுதல்




மனிதன் வாழ்வதற்கு குடும்பம் நடத்துவதற்கும் வசிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு பெற்றவருக்கும் தெரியாமலும், குற்றங்கருதி  வீடு புகுதலை மறைந்திருந்து மேற்க்கொண்டால், அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி ஒளிந்து வீடுப் புகுதல்  ( Lurking house-trespass )  என்கிறோம்.



Section 443- Lurking house-trespass



Whoever commits house-trespass having taken precautions to conceal such house-trespass from some person who has a right to exclude or eject the trespasser from the building, tent or vessel which is the subject of the trespass, is said to commit "lurking house-trespass". 
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1903 


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

Saturday, 16 July 2016

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 442 - குற்றங் கருதி வீடுப் புகுதல்

இ.த.ச 442 - குற்றங் கருதி வீடுப் புகுதல்

மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் குற்றங்கருதி நுழைதல் அல்லது அவ்வாறு நுழைந்து அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி வீடுப் புகுதல் ( House trespass ) என்று சொல்லப்படும்.


மேலும் அவரின் வழிப்பாட்டுக்கு உரிய ஒர் கட்டிடம் அல்லது அவரின் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்குள் குற்றங் கருதி அத்து மீறுவதை குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்றே கூறப்படும்.



விளக்கம் - அத்தகைய மீறுதல் செய்யும் நபரின் உடல் உறுப்பின் ஒருப் பகுதி அவ்வாறு உள்ளே நுழைத்தாலும் குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்ற குற்றம் நடைப் பெற்றாக கருதப்படும்.


Section 442- House trespass

    



    Whoever commits criminal trespass by entering into or remaining in any building, tent or vessel used as a human dwelling or any building used as a place for worship, or as a place for the custody of property, is said to commit "house-trespass".

Explanation-The introduction of any part of the criminal trespasser's body is entering sufficient to constitute house-trespass.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1902


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

Sunday, 10 July 2016

தினம் ஒரு சட்டம் - குற்றங்கருதி அத்து மீறி நுழைதல்




இ.த.ச 441

       யாராவது குற்றம் புரிய வேண்டும், அல்லது மிரட்ட வேண்டும் அல்லது ஒருவரை அவமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு தொல்லை தரவேண்டும் என்ற கருத்துடன் ஒருவருக்குச் சொந்தமான அல்லது அவருடைய வசம் உள்ள ஒர் இடத்தில் மேற்க்கண்ட குற்றம் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைவதும் ..,


அல்லது 

      சட்டபூர்வமான ஒரிடத்தில் நுழைந்துவிட்டு அந்த இடத்துக்குள் நுழைந்தப் பின்னர் குற்றம் புரிய வேண்டும் , அவர்களை மிரட்ட வேண்டும், அல்லது அவர்களை அவமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு தொல்லைத் தரவேண்டும் என்ற கருத்துடன் சட்ட விரோதமாக அந்த இடத்தில் இருப்பதும் குற்றங்கருதி அத்து மீறல் (Criminal Trespass) என்று சொல்லப்படும்.



Section 441- Criminal trespass



     Whoever enters into or upon property in the possession of another with intent to commit an offence or to intimidate, insult or annoy any person in possession of such property,

     Or having lawfully entered into or upon such property, unlawfully remains there with intent thereby to intimidate, insult or annoy any such person, or with intent to commit an offence,

is said to commit "criminal trespass".

STATE AMENDMENT

State of Uttar Pradesh:

For section 441, substitute the following: --

"441. Criminal Trespass:-- Whoever enters into or upon property in possession of another with intern to commit an offence or to intimidate, insult or annoy and person in possession of such property, or having lawfully entered into or upon such property, unlawfully remains therewith intent thereby intimidate, insult or annoy any such person, or with intent to commit an offence.

Or, having entered into or upon such property, whether before or after the coming into force of the Criminal Law (U.P. Amendment) Act, 1961, with the intention of taking unauthorized possession or making unauthorized use of such property fails to withdraw from such property or its possession or use, when calls upon to do so by that another person by notice in writing, duly served upon him, by the date specified in the notice,

is said to commit "criminal trespass".

[Vide U.P. Act No. 31 of 1961, section 2 (w.e.f 13-11-1961)]. 




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

Sunday, 3 July 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்படி ஆற்றும் காரியத்தில் ஒரு குற்றம் நடந்தால்


இ.த.ச 76

 

     யாரவது ஒருவர் சட்டத்தின் மூலம் ஒரு சட்ட செயலை செய்யும் போது , செய்ய வேண்டிய கடமையுள்ள ஒருவர் , அவர் தம்முடைய கடமையை நல்ல எண்ணத்துடன் செய்யும் போது, அது ஒரு தவறான செயலில் முடித்தாலும் அது குற்றமாகாது.


உதாரணம்

அ - ஒரு ராணுவ வீரர் தனது மேல் அதிகாரியின் உத்திரவின் படி ஒரு துப்பாக்கி சூடு நடத்துகின்றார், இந்தப்பிரிவின் கீழ் அந்த ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்த முடியாது.

ஆ - ஒரு நீதிமன்றத்தின் உத்திரவின் படி ஒரு நீதிமன்ற அலுவலரை பணித்து ராஜாவை கைது செய்யும் படி ஆணையிடுகின்றார், நீதிமன்ற அலுவலர் அவரை கைது செய்கின்றார். அந்த நீதிமன்ற அலுவலர் ராஜாவை கைது செய்யாமல் ராமுவை தவறுதலாக கைது செய்கின்றார் , இந்த பிரின் கீழ் நீதிமன்ற அலுவலர் மீது குற்றம் சுமத்த முடியாது.


Section 76 in The Indian Penal Code

76. Act done by a person bound, or by mistake of fact believing himself bound, by law.—Nothing is an offence which is done by a person who is, or who by reason of a mistake of fact and not by reason of a mistake of law in good faith believes himself to be, bound by law to do it. Illustrations
 
(a) A, a soldier, fires on a mob by the order of his superior officer, in conformity with the commands of the law. A has com­mitted no offence.
 
(b) A, an officer of a Court of Justice, being ordered by that Court to arrest Y, and, after due enquiry, believing Z to be Y, arrests Z. A has committed no offence.




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.