Tuesday, 24 February 2015

பாரடாக்ஸ்(Paradox) ஒரு அறிமுகம்


 பாரடாக்ஸ்(Paradox)

 
                       பாரடாக்ஸ்(Paradox).  A paradox is a statement of conclusion that seems self-contradictory but is really true. பாரடாக்ஸுக்கு ஒரு பிரபலமான உதாரணம் “I always lie”. பொய் சொல்லுவது உண்மையாக இருந்தால், இந்த வாக்கியம் மூலம் உண்மையைக் கூறுவதால் நேர்மாறாக தோன்றும். அல்லது பொய் போல தோன்றும் உண்மை. இதில் இரண்டு வாக்கியம் இருக்கும் அதில் ஒன்று உண்மை மற்றோன்று போய் போல தோன்றும் உண்மை.


     உதாரணம் எந்திரன் படத்தில் முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் , ஆமைதான் வெற்றி பெறும் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறதே என்பது கேள்வி.. அதுக்கு பதிலாக சிட்டி ரோபோ பாரடாக்ஸ் என்று எளிமையாக சொல்லும். அதுப்பற்றி அறிய கூகுளில் தேடினேன்.



     அப்புறம் தான் தெரியும் இந்த உலகமே  பாரடாக்ஸ் என்று சின்ன உதாரணம் கடவுள் இருக்காரா இல்லையா என்ற கேள்விக்கு சிட்டி ரோபோ கடவுள்னா யாரு என்று கேள்வி கேட்டும் பதிலாக நம்மை எல்லாம் படைத்தவர் என்று பதில் கூறுவார். சிட்டி ரோபோ என்னை படைத்தது வசிகரன் -   கடவுள் இருக்கார் என்று பதில் சொல்லும். ஒரு பாரடாக்ஸ் எப்படின்னா படைத்தவன் இல்லாமல் படைப்புகள் இல்லை.

      தினம் தினம் நாம் பேசும் ஒவ்வோரு வாக்கியங்களும் பாரடாக்ஸ் சாக அமைந்து வி்டுகின்றது. இது ஏன் இப்பன்னு நிங்கள் கேக்கலாம். நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்று மனிதன் தன் அறிவையும் , மதி நுட்பத்தையும் வைத்து கண்டுப்பிடிப்பான் ஆனால் கணினி எவ்வாறு உண்மையா அல்லது பொய்யா என்று கண்டறியும். இவைகள்  பாரடாக்ஸ் என்று நாம் கணினிக்கு உள்ளிடு செய்ய வேண்டும்.



 சரி உதாரணத்திற்கு வருவோம்.

      முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் , ஆமைதான் வெற்றி பெறும் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறதே என்பது கேள்வி.. 

1. முயல் ஆமையை விட வேகமாக ஒடும் - இது உண்மை
2. ஆமையால் எப்போதும் முயலை முந்த முடியாது  - இதுவும் உண்மை

      அப்படி இருக்கும் போது  ஆமை முயலை முந்தி விடுகிறது லாஜிக் படி நடக்காது ஆனால் நடந்து விடுகின்றது எப்படி ஒன்று ஆமை தந்திரத்தால் ஜெயிக்கின்றது அல்லது முயல் தன்னுடைய கடமையை செய்ய மறந்து விடுகின்றது. இதுப்போன்ற நிகழ்வுகள் பாரடாக்ஸ் என்று அறியப்படுகின்றது.

இதையே எங்க பாட்டி

1. புல் தடுக்கி விழ்ந்த பயில்வான்
2. தான் பிடித்த முயலுக்கு முனு காலு

    கடைசியாக விவேக் கூட இதை ஒரு நகைச்சுவையாக யாருமே இல்லாத கடையில யாருக்குட டி போடுறன்னு கலாய்ப்பாரு








3 comments:

  1. அட...! உதாரணங்களும் சுவாரஸ்யம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி அண்ணா முதலில் உங்களுக்கு தான் தெரிவித்தேன். உங்களை எல்லா பதிவுகளிலும் பார்ப்பேன். வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எனக்கு ஆதரவு அளியுங்கள்

    ReplyDelete