Thursday, 26 February 2015

உத்தம வில்லன் விமர்ச்சனம்


 


    உத்தம வில்லன்  விமர்ச்சனம் என்றதும் கமல் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் என்னடா இது படம் அதுக்குள்ள ரிலிஸ் பண்ணிட்டாங்களான்னு நினைத்து தூக்கம் களைந்து விடப்போகுது. உண்மையில் இந்த பதிவு படத்தைப்பற்றி இல்லை அப்புறம்  இது படத்தின் தலைப்பைப்பற்றியது. [சூப்பர் ஜீ] மன்னிக்கவும் எடுத்தவுடன் படத்தலைப்பு விமர்ச்சனம் என்றால் யாரும் இந்த பக்கம் கூட வர மாட்டிங்க இல்லியா? அதனால தான் பாஸ் உங்களை இந்த பக்கம் வர வைக்க இந்த முயற்சி.[பீல் பண்ணாதீங்]

     உத்தம வில்லன் - இது தமிழில் சொல் முன்னணி அல்லது முரண்பாடு உள்ளது போல் இருக்கும் சொல் அடுக்கு  இதனை ஆங்கிலத்தில் oxymoron என்பார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் true lies, known secret,  keep moving, dark light, leaving dead, crazy wisdom. போன்றவை ஆங்கிலத்தில் உள்ள சொல் முன்னணி ஆகும்.



     அதுப்போல உத்தமம் என்பது சுத்தமாக இருப்பதையும் வில்லன் என்பது வில்லத்தனம் பண்ணுவதையும் குறிக்கும். ஆனால் இந்த படத்தில் தலைப்பை கமல் சார் ஏன் தேர்ந்தேடுத்தார் என்பதைப் படத்தை பார்த்தால் தான் தெரியும். ஆனால் தலைப்பை வைத்து பார்க்கும் போது அதில் இரண்டு வேறுப்பட்ட நடிப்பில் கலக்குவார்ன்னு எதிர் பார்க்கின்றேன். அவரது படத்தின் தலைப்பே எப்போதும் வித்தியாசமாக இருக்கும். 1995 வெளிவந்த குருதிப்புனல் தொடங்கி இதற்கு முன் வெளிவந்த விஸ்வரூபம் வரை எல்லா பட தலைப்புகளும் பிரம்மாதம் அருமை.

    அவற்றில் சில எனக்கு பிடித்தவைகள்.


மேலும் தமிழில் இதுப்போல இருக்கும் சில சொல் முன்னணி களைப் இப்போது பார்ப்போம் (தங்களுக்கு தெரிந்தால் மேலும் பகிரவும்)

1. ஊரறிந்த ரகசியம்
2. அ யோக்கியன்
3. கூரையில்ல சுவர்
  
  போன்ற சொற்கள் உள்ளன. புதியதாக நான் ஒரு வார்த்தையை கண்டுப்பிடித்துள்ளேன் அது உத்தம மேனேஜர். ஆமாம் என்ன தான் மேனேஜர் உத்தம நல்லவராக  இருந்தாலும் வேலையின்னு வரும் போது மேனேஜராகவே மாறிடுறார் அல்லவா அதனால் தான் . ஏன் நாளைக்கு நாம் அந்த இடத்திற்கு வந்தாலும் அப்படி தான் இருப்போம். அடுத்து பட விமர்ச்சனம் படம் வந்ததும் பார்த்துவிட்டு எழ்துகிறேன். மறக்காமல் நீங்களும் படத்தை பாருங்கள் என் விமர்ச்சனத்துக்காக வெயிட் பண்ணாதிங்க. (பீல் பண்ணாதிங்க பாஸ் சும்மா தமாஷ்).



 Thanks to கமல்ஹாசன் & wiki [http://en.wikipedia.org/wiki/Oxymoron]



7 comments:

  1. வார்த்தை அலசல் அருமை
    (தலைப்பில் "பட " என்பது
    இல்லாமல் இருக்கலாம் )
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் மாற்றிவிட்டேன்

      Delete
  2. 500 பேர் இது வரை படித்துள்ளீர்கள் நன்றி

    வாழ்த்துங்கள் வளர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இது வரை 1000 இது வரை

      வாழ்த்துங்கள் வளர்கிறேன்

      Delete
  3. நன்றி நண்பரே! தங்கள் என் தளம் வந்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் பல!!

    அன்புடன் கருர்பூபகீதன்!!

    ReplyDelete