Monday, 9 January 2017

விவசாயிகளுக்கு மாத சம்பளம்



விவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான
 



விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும்.
 

 
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...


விவசாயிகளின் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் விவசாயி பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும்.

1. விவசாயிகளுக்கு தேவையான கடனுக்காக தனி விவசாய வங்கிகள்.

2. விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், விதைகள் ஒரே இடத்தில் கிடைக்க வேளாண்மை சந்தை.


3. விவசாயத்திற்கேன தனி நீதிமன்றம், விவசாயி தன்னுடைய இழப்பிட்டை இத்தகைய நீதி மன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுதல்.

4. விவசாய நிலத்தை பட்டா நிலமாக மாற்றுவதை இத்தகைய விவசாய நீதிமன்றத்தின் மூலம் தடுக்கலாம்.

5. விவசாயத்திற்கும், விவசாயிக்கும் காப்பீடு.


6. விவசாயத்திற்கேன தனி பட்ஜெட்,
 
7. விவசாயிகளின் பிள்ளைகளுக்கு தனி இடஒதுக்கீடு மற்றும் காப்பீடு மற்றும் இதர பல உதவிகள்.

8. மண் பரிசோதனை மண்டலங்கள் வட்டாரம் தோறும்.

9. சந்தை விலையில் கொள்முதல், மத்திய அரசின் விலை விதிப்பின் படி அந்த விலை நிர்ணயம்


10. குறைந்தப்பட்ச மாதந்திர ஊதியமும், போனஸ் தொகையும் வயது முதிர்ந்தப் பின்பு பணிக்கால ஒய்வுத் மூப்புத் தொகையும் வழங்க வேண்டும்.

11. அரசிற்கு சொந்தமான தரிசு மற்றும் பொறம்போக்கு நிலத்தில் அரசு விவசாய மற்றும் தோட்டக்கலை பண்ணைகளை அமைக்க வேண்டும், அதில் விவசாயம் சார்ந்த மாணவர்களையும் மாணவிகளையும் ஈடுப்படுத்த வேண்டும்.



12. ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த கல்லூரிகளை உண்டாக்க வேண்டும் அதில் விவசாயம் சார்ந்த மாணவர்களையும் மாணவிகளையும் பயிற்ச்சிக்கு ஈடுப்படுத்த வேண்டும்.


மற்றும் தேசிய விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆனையம் , மாநில விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பு, மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு ஆனையம், வட்டார விவசாயிகள் பாதுகாப்பு ஆனையம் அமைக்க ஏற்பாடுகள் இதன் மூலம் விவசாயிகளின் குறை மற்றும் துயர்துடைக்க முடியும்.


மேலும் தங்களுக்குத் தெரிந்த பல கருத்துக்களை இத்துடன் பதிவிடவும்..

எனக்கு தெரிந்த சில கருத்துக்களை பொதுமக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்துடன் வெளியிடுகின்றேன்.

1 comment:

  1. விவசாயீக்கு சேரவேண்டிய அனைத்து முன்னேற்றமும் இடைதரகர்களால் பறிக்கபடுகிறது இதற்கு மூலகாரண அரசியலில் சிக்கல் ஏற்படுத்தும் எதிரகட்சிகளே தமிழ்நாட்டில் இதுபோந் அதிகமாய் உள்ளது,......05/12/2020.

    ReplyDelete