Thursday 22 October 2015

தினம் ஒரு சட்டம் - நட்பு நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தால்

இ.த.ச 125

யாராவது, இந்திய தேசத்தின் நட்புறவு ஆசிய நாட்டுகளுக்கு எதிராக போர் செய்வது அல்லது போர் செய்ய முயற்சி செய்வது அல்லது போர் தொடுப்பதற்கு உடந்தையாக இருப்பது போன்றவை குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்கு வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது அபராதம் மட்டும் விதிக்கப்படும்.

Section 125- Waging war against any Asiatic Power in alliance with the Government of India
 
        Whoever wages war against the Government of any Asiatic Power in alliance or at peace with the *[Government of India] or attempts to wage such war, or abets the waging of such war, 

       shall be punished with **[imprisonment for life], to which fine may be added, or with imprisonment of either description for a term which may extend to seven years, to which fine may be added, or with fine.

*Subs. by the A.O. 1950, for "Queen".

**Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

Monday 19 October 2015

தினம் ஒரு சட்டம் - இந்திய தேசத்தை நிந்தித்தால்

இ.த.ச 124அ

            யாராவது, சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை, மக்களுக்கு எதிராக செயல் படுகின்ற அரசாங்கம் என்கிற வெறுப்பையும் அல்லது விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக ஒருவர் தம்முடைய எழுத்தால் அல்லது பேச்சால் அல்லது சைகையால் அல்லது படத்தால் அல்லது வேறு எந்த விதத்திலாவது இத்தகைய காரியத்தை செய்வது குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய அபராதமும் அல்லது மூன்று ஆண்டுகளுடன் கூடிய அபராதமும் சேர்த்து அல்லது அபராதம் மட்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் 1 - அவநம்பிக்கையை உருவாக்குவது என்பது 
தேச விரோதத்தை குறிக்கும்
 
விளக்கம் 2 - இந்திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு 
அரசின் செயலை கூறித்து உண்மையான
ஒரு சம்பவத்தைக் குறித்து கூறுவது குற்றமாகாது.
 
விளக்கம்  3 - இந்திய ஜனநாயகத்தின்படி அரசின் நிர்வாக 
குறைகளைப் பற்றி ஒரு கன்டனம் 
  தெரிவிப்பது குற்றமாகாது, இத்தகைய கண்டனம் ஒரு 
அரசின் தேச விரோத உணர்ச்சியை தூண்டும் 

உணர்ச்சிக்களைத் தூண்டும் நிலைக்குப் போகாமல் 
காப்பதே இந்தப் பிரிவின் நோக்கமாகும். 

Section 124-A- Sedition

   Whoever, by words, either spoken or written, or by signs, or by visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards. 2[* * *] the Government established by law in 3[India], 4[* * *] 

    shall be punished with 5[imprisonment for life], to which fine may be added, or with imprisonment which may extend to three years, to which fine may be added, or with fine.

Explanation 1-The expression "disaffection" includes disloyalty and all feelings of enmity.

Explanation 2-Comments expressing disapprobation of the measures of the attempting to excite hatred, contempt or disaffection, do not constitute an offence under this section.

Explanation 3-Comments expressing disapprobation of the administrative or other action of the Government without exciting or attempting to excite hatred, contempt or disaffection, do not constitute an offence under this section.

1. Subs. by Act 4 of 1898, s. 4, for the original s. 124A which had been ins. by Act 27 of 1870, s. 5.

2. The words "Her Majesty or" omitted by the A.O. 1950. The words "or the Crown Representative inserted after the word "Majesty" by the A.O. 1937 were omitted by the A.O. 1948.

3. The words "British India" have successively been subs. by the A.O. 1948, the A.O.1950 and Act 3 of 1951, sec.3 and sch. to read as above.

4. The words "or "British Burma" ins. by the A.O.1937 omitted by the A.O.1948.

5. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life or any shorter term" (w.e.f.1-1-1956). 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - இந்திய ஜனாதிபதி, கவர்னர்க்கு எதிராக போராடினால்

இ.த.ச 124

      யாராவது, இந்திய ஜனாதிபதி அல்லது இந்திய மாநில கவர்னர்க்கு எதிராக போராடி அவர்களுடைய கடமையை செய்ய விடாமல் தடுத்தல் அல்லது அவர்களை வன்முறை அல்லது அச்சுறுத்தல் மூலம் அவர்கள் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யவிடாமல் தடுத்தல் அல்லது அவர்கள் சட்டப்படி செய்யக் கூடாததை செய்ய வேண்டி நிர்பந்தித்தால் அது குற்றமாகும். 

இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும்.

Section 124- Assaulting President, Governor, etc., with intent to compel or restrain the exercise of any lawful power
      
   Whoever, with the intention of including or compelling the 1[President] of India, or the 2[Governor 3[* * *]] or any 4[State], 5[* * *] 6[* * * ] 7[* * *] to exercise or refrain from exercising in any manner any of the lawful powers of such 8[President or 2[Governor 3[* * *]],

Assault or wrongfully restrains, or attempts wrongfully to restrain, or overawes, by means of criminal force or the show of criminal force, or attempts so to overawe, such 8[President or 2[Governor 3[* * *]],

Shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1. Subs. by the A.O. 1950, for "Governor General".

2. Subs. by Act 3 of 1951, sec.3 and sch., for "Governor".

3. The words "or Rajpramukh" omitted by the A.O.1956.

4. Subs. by the A.O.1950, for "Province" Which had been subs. by the A.O.1937, for "Presidency".

5. The words "or a Lieutenant-Governor" omitted by the A.O.1937.

6. The words "or a member of the Council of the Governor General of India" omitted by the A.O. 1948.

7. The words "or of the Council of any Presidency" omitted by the A.O.1937.

8. The original words "Governor General, Governor, Lieutenant-Governor or Member of Council" have successively been amended by the A.O. 1937, the A.O.1948 and the A.O. 1950 to read as above.
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

Sunday 18 October 2015

தினம் ஒரு சட்டம் - இந்தியாவிற்கு எதிராக போர் செய்யும் முயற்சியை மறைத்து

இ.த.ச 123

     யாராவது, இந்திய அரசுக்கு எதிராக போர் செய்ய முயற்ச்சிகள் நடைப் பெறுகின்றன என்பதை அறிந்தப்பின்பும் அதனை மோசடியாக மறைத்து, ரகசியமாக தம்முள் வைத்துக் கொண்டு அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவி செய்வது குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 123- Concealing with intent to facilitate design to wage war

     Whoever by any act, or by any illegal omission, conceals the existence of a design to wage war against the *[Government of India], intending by such concealment to facilitate, or knowing it to be likely that such concealment will facilitate, the waging of such war, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

*Subs. by A.O. 1950, for "Queen". 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஆயுதங்கள் வைத்திருந்தால்

இ.த.ச 122

      யாராவது, இந்திய அரசுக்கு எதிராக போரட ஆயுதங்களை தயாரித்தாலும் அல்லது இந்தியாவிற்கு எதிராக போரட எத்தகைய ஆயுதங்களை வாங்கினாலும் அல்லது வைத்திருந்தாலும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை அத்துடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 122- Collecting arms, etc., with intention of waging war against the Government of India

    Whoever collects men, arms or ammunition or otherwise prepares to wage war with the intention of either waging or being prepared to wage war against the 1[Government of India], 

    shall be punished with 2[imprisonment for life] or imprisonment of either description for a term not exceeding ten years, 3[and shall also be liable to fine].

1. Subs. by the A.O.1950, for "Queen".

2. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life" (w.e.f. 1-1-1956).

3. Ins. by Act 16 of 1921, sec.3, for "and shall forfeit all his property". 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 

Saturday 17 October 2015

தினம் ஒரு சட்டம் - இந்தியாவிற்கு எதிராக சதி செய்ந்தால்

இ.த.ச 121அ

        யாராவது, இந்திய அரசுக்கு எதிராக இந்தியவிற்குள்ளிருந்தும் அல்லது இந்தியாவிற்கு வெளியிலிருந்தும், இதச 121 வது பிரிவின் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றத்தை புரிவதற்கு ஒரு மாநிலம் அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ
 
    யார் சதி செய்ந்தாலும், தம்முடைய குற்ற பலத்தைப் பயன்படுத்தி வன்முறைச் செயல்களால், மத்திய அரசையும் அல்லது மாநில அரசையும் அச்சுறுத்துவதற்காக எத்தகைய சதி செய்ந்தாலும் குற்றமாகும்.

     அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - இந்தப் பிரிவில் கீழ் கூறப்பட்டுள்ள சதி எனப்படுவது எந்த சதி  செயலை மட்டுமின்றி ஒரு சட்டப்படி செய்ய வேண்டிய காரியத்தை செய்யாததையும் குறிக்கும்.

Section 121-A- Conspiracy to commit offences punishable by section 121

1 Whoever within or without 2[India] conspires to commit any of the offences punishable by Section 121, 3[***] or conspires to overawe, by means of criminal force or the show of criminal force, 4[the Central Government or any 5[State] Government 6[***], 

   shall be punished with 7[imprisonment for life], or with imprisonment of either description which may extend to ten years, 8[and shall also be liable to fine].

Explanation: -To constitute a conspiracy under this section, it is not necessary that any act or illegal omission shall take place in pursuance thereof.]

1. Ins. by Act 27 of 1870, s. 4.

2. The words "British India" have successively been subs. by the A.O. 1948, the A.O. 1950 and Act 3 of 1951, s.3 and Sch. to read as above.

3. The words "or to deprive the Queen of the sovereignty of the Provinces or of any part thereof' omitted by the A.O. 1950.

4. Subs. by the A.O. 1937, for "the Government of India" or any Local Government".

5. Subs. by the A.O. 1950, for "Provincial".

6. The words "or the Government of Burma" omitted by the A.O. 1948.

7. Subs. by the Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life or any shorter term" (w.e.f. 1-1-1956).

8. Ins. by Act 16 of 1921, s. 3, for "and shall forfeit all his property". 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - இந்தியாவிற்கு எதிராக போர் செய்ந்தால்

இ.த.ச 121

      யாராவது, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் செய்ந்தால் அல்லது போர் செய்ய நினைப்பவருகளுக்கு உடந்தையாக இருந்தால் அவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

Section 121- Waging, or attempting to wage war, or abetting waging of war, against the Government of India

      Whoever wages war against the 1[Government of India], or attempts to wage such war, or abets the waging of such war, shall be punished with death, or 2 [imprisonment for life] 3[and shall also be liable to fine].

4[Illustration]

5[***] A joins an insurrection against the 6[Government of India]. A has committed the offence defined in this section.

7[* * *]

1. Subs. by the A.O. 1950, for "Queen".

2. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life" (w.ef.1-1-1956).

3. Subs. by Act 16 of 1921, sec.2. for "and shall forfeit all his property".

4. Subs. by Act 36 of 1957, sec.3 and sch. II, for "Illustrations".

5. The brackets and letter "(a)" omitted by Act 36 of 1957, sec.3 and sch. II.

6. Subs. by the A.O. 1950, for "Queen".

7. Illustration (b) omitted by the A.O. 1950. 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 

Thursday 15 October 2015

தினம் ஒரு சட்டம் - தவறான எடைக் கற்களை செய்ந்தால்

இ.த.ச 267

    யாராவது, ஒரு தவறான எடைக் கற்கள், தவறான நீளத்தை அளக்கும் கருவி அல்லது தவறான முகத்தலை அளக்கும் கருவி அவற்றை செய்வதும் அல்லது விற்பதும் குற்றமாகும். அவைகள் தவறானவை என தெரிந்தப் பின்பும் அவற்றை உண்மையான கருவிகள் போல உபயோகிப்பது குற்றமாகும் அல்லது அவற்றை உண்மையான கருவிகள் போல பயன்படும் என தெரிந்தும் அவற்றை உருவாக்குவதும் விற்பதும் பழக்கத்தில் விடுவதும் குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டு வரை சிறைக்காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 267- Making or selling false weight or measure

      Whoever makes, sells or disposes of any instrument for weighing, or any weight, or any measure of length of capacity which he knows to be false, in order that the same may be used as true, or knowing that the same is likely to be used as true, 
      
      shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both. 

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1714

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - தவறான எடைக் கற்களை வைத்திருந்தால்

இ.த.ச 266.

    யாராவது, தம்மிடம் தவறான எடை அல்லது நீளம் அல்லது முகத்தல் ஆகியவற்றைக் அளக்கப்பயன் படும் கருவிகளை தவறானவை என தெரிந்தப்பின்பும் மோசடியாக அவற்றைப் பயன்படுத்துவதும் அல்லது தம்மிடம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டு வரை சிறைக்காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 266- Being in possession of false weight or measure
 
      Whoever is in possession of any instrument for weighing, or of any weight, or of any measure of length or capacity, which he knows to be false, *[* * *] intending that the same may be fraudulently used, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.

* The word "and" omitted by Act 42 of 1953, Sec. 4 and Sch. III.
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 
 
Wednesday 14 October 2015

தினம் ஒரு சட்டம் - தவறான எடைக் கருவிகளை உபயோகித்தால்

இ.த.ச 264

        யாராவது தவறான எடைக் கருவிகளையோ அல்லது பொருட்களையோ பயன்படுத்தினால் குற்றமாகும், மோசடியாக தனக்கு தெரிந்தப் பின்பும் அத்தகைய கருவிகளை பயன் படுத்தினால் 

      அவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக் காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 264- Fraudulent use of false instrument for weighing
     Whoever fraudulently uses any instrument for weighing which he knows to be false, 
 
   shall be punished with imprisonment or either description for a term which may extend to one year, or with fine, or with both.
 
இ.த.ச 265
 
      யாராவது, மோசடியாக தவறான எடைக் கற்களையும் அல்லது தவறாக நிளத்தை அளக்க கூடிய அளவுக் கோலையும் அல்லது கனத்தை அளக்க கூடிய அளவுக் கோலையும் பயன்படுத்துவது குற்றமாகும்.
 
    அவ்வாறு தாம் உபயோகிக்க கூடியது தவறானது என தெரிந்து அதைப் பயன்படுத்தினால் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு       அவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக் காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
 
Section 265- Fraudulent use of false weight or measure
     Whoever fraudulently uses nay false weight or false measure of length or capacity, or fraudulently uses any weight or any measure of length or capacity as different weight or measure form what it is, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 
 
தினம் ஒரு சட்டம் - அரசாங்க முத்திரைகளை அழித்து உபயோகப்படுத்துவது

இ.த.ச 262,

      யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைகளை அவைகள் உபயோகப்பட்டுள்ளது என்ற குறியை அழிப்பதும் அல்லது அகற்றுவதும் குற்றமாகும். அந்தக் குறியை அழித்துவிட்டு அவைகளை உபயோகிக்கவில்லை நல்ல முத்திரை என உபயோகப்படுத்துவதும்      அல்லது விற்பனை செய்வதும் அல்லது வைத்திருப்பதும் குற்றமாகும். 

      இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 262- Using Government stamp known to have been before used

      Whoever, fraudulently or with intent to cause loss to the Government, uses for any purpose a stamp issued by Government for the purpose of revenue, which he knows to have been before used, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1708

இ.த.ச 263,

      யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைகளை அவைகள் உபயோகப்பட்டுள்ளது என்ற குறியை அரசுக்கு நட்டம் உண்டாக்க வேண்டும் என அழிப்பதும்,  அல்லது அவ்வாறு அந்த முத்திரை குறியிடு அழிக்கப்பட்டுள்ளது என தெரிந்து தம் வசம் வைத்திருப்பதும் அல்லது விற்பனை செய்வதும் அல்லது வேறு வகைகளில் பயன்படுத்தினாலும் குற்றமாகும்.

       இந்தக் குற்றத்திற்கு மூன்றுஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 263- Erasure of mark denoting that stamp has been used

        Whoever, fraudulently or with intent to cause loss to Government, erase or removes from a stamp issued by the Government for the purpose of revenue, any mark, put or impressed upon such stamp for the purpose of denoting that the same has been used, or knowingly has in his possession or sells or disposes of any such stamp from which such mark has been erased or removed, or sell or disposes of any such stamp which he knows to have been used, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1709

இ.த.ச 263A,

(1) (அ) - யாராவது, போலியான முத்திரைத் தாள்களை அல்லது முத்திரைகளை உருவாக்குவதும் அல்லது அவைகள் போலியானவை என தெரிந்தும் அவற்றை விற்பதும் அல்லது விற்பனைக்கு வைத்திருப்பதும் அல்லது அஞ்சலு்க்கு அவற்றைப் பயன் படுத்துவதும் குற்றமாகும்.

(1) (ஆ) யாராவது, தம்மிடம் எந்த விதமான சட்ட ரீதியான காரணமின்றி போலி வில்லைகளை வைத்திருப்பதும்

(1) (இ) யாராவது, போலி முத்திரைகளை உருவாக்கப்பயன்படும், அச்சு வில்லைகளை,
கருவிகள் அல்லது பொருட்கள் இருந்தாலும் அல்லது அந்தப் பொருட்களை உண்டாக்கினாலும் அல்லது தம் வசம் வைத்திருந்தாலும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு இரு நூறு ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

(2) போலி முத்திரைகளை உருவாக்கப் பயன்படும் அச்சு, தகடுகள் , இயந்திரங்கள் அல்லது பொருட்கள் யாரிடம் இருந்தாலும் அவைகள் கைப்பற்றப்படும். மேலும் அத்தகைய பண்டங்கள் பறிமுதல் செய்யப்படும்.

(3) இந்தப் பிரிவுகளில் போலி முத்திரைத் தாள்கள் என்பது அஞ்சலுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் தபால் வில்லைகள் மற்றும் காகிதங்களை குறிக்கும்.

(4) இந்தப் இதச 255 முதல் 263 பிரிவுகளில் பயன்படுத்தப்படும் அரசாங்கம் என்ற பதம் இந்திய அரசாங்கத்தையும் அதன் கீழ் செயலாற்றும் நிர்வாகத்தையும் மற்றும் அதன் கீழ் பணியாற்றும் நபர்களையும் குறிக்கும்.

Section 263-A- Prohibition of fictitious stamps

Whoever -

(a) Makes, knowingly utters, deals in or sells any fictitious stamps, or knowingly uses for any postal purpose any fictitious stamp, or

(b) Has in his possession, without lawful excuse, any fictitious stamp, or

(c) Makes or, without lawful excuse, has in his possession any die, plate, instrument or materials for making any fictitious stamp,

Shall be punished with fine which may extend to two hundred rupees.
Any such stamps, die, plate, instrument or materials in the possession of any person for making any fictitious stamp *[may be seized and, if seized] shall be forfeited.

* Subs. by Act 42 of 1953, sec.4 and sch. III, for "may be seized and" (w.e.f. 23-12-1953)
In this section "fictitious stamp" means any stamp falsely purporting to be issued by the Government for the purpose of denoting a rate of postage, or any facsimile or imitation or representation, whether on paper or otherwise, of any stamp issued by Government for that purpose.
In this section and also in sections 255 to 263, both inclusive, the word, "Government", when used in connection with, or in reference to, any stamp issued for the purpose of denoting a rate of postage, shall, notwithstanding anything in section 17, be deemed to include the person or persons authorized by law to administer executive government in any part of India, and also in any part of Her Majesty's dominions or in any foreign country.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1710

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.

Tuesday 13 October 2015

தினம் ஒரு சட்டம் - அரசாங்க முத்திரைகளை அழிப்பது

இ.த.ச 261

யாராவது, இந்திய அரசாங்கத்திற்கு நட்டம் உண்டாக்க வேண்டும் என்று மோடியாக ஒரு பண்டத்தின் மீது உள்ள ஒரு அரசாங்க முத்திரையை அழிப்பதும் , அல்லது அந்த பண்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள முத்திரையை அகற்றுவதும் குற்றமாகும்.

அவ்வாறு அந்தப் பண்டத்தில் உள்ள எழுத்துக்களை அழிப்பதும் குற்றமாகும் அதில் மீள் முத்திரை இடுவதும் குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு  மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும்  அல்லது மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலும் அல்லது அபராதம் மட்டுமும்  தண்டனையாக வழங்கப்படும்.

Section 261- Effacing, writing from substance bearing Government stamp, or removing from document a stamp used for it, with intent to cause loss to Government
     Whoever, fraudulently or with intent to cause loss to the Government, removes of effaces from any substance, bearing any stamp issued by Government for the purpose of revenue, any writing or document for which such stamp has been used, or removes from any writing or document a stamp which has been used for such writing or document, in order that such stamp may be used for a different writing or document, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both. 
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - போலி பத்திரங்களை உபயோகித்தால்

இ.த.ச 259

   யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைத் தாள்களை , அவைகள் போலியானது என அறிந்தப் பின்பு அவற்றை நல்ல முத்திரைத் தாள்கள் என விற்பதும் அல்லது விற்பதற்கு தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 259- Having possession of counterfeit Government stamp

     Whoever has in his possession any stamp which he knows to be a counterfeit of any stamp issued by Government for the purpose of revenue, intending to use, or dispose of the same as a genuine stamp, or in order that it may be used as a genuine stamp, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

இ.த.ச 260
       யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு வெளியிடுகின்ற அரசாங்க முத்திரைத் தாள்களை ,
அவைகள் போலியானது என அறிந்தப் பின்பு அவற்றை நல்ல முத்திரைத் தாள்கள் போல உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.

       இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 260- Using as genuine a Government stamp known to be a counterfeit

      Whoever uses a s genuine any stamp, knowing it to be counterfeit of any stamp issued by Government for the purpose of revenue, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both. 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - போலி பத்திரங்களை தயாரித்தல்

இ.த.ச 257

யாராவது போலி முத்திரைத் தாள்களை உருவாக்கினாலும் அதனை தயாரிக்கப்பயன் படும் இயந்திரத்தை உற்பத்தி செய்ந்தாலும் அல்லது அத்தகைய இயந்திரத்தை வாங்குவதும் அல்லது விற்பதும் குற்றமாகும்.

அத்தகைய போலி முத்திரைத் தாள்களை தயாரிக்கும் வேலையின் எத்தகைய காரியத்தை செய்ந்தாலும் அதனில் எந்த வேலையில் பங்கேற்றாலும் குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 257- Making or selling instrument for counterfeiting Government stamp

    Whoever makes or performs any part of the process of making, or buys, or sells, or dispose of, any instrument for the purpose of being used, or knowing or having reason to believe that it is intended to be used, for the purpose of counterfeiting any stamp issued by Government for the purpose of revenue, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

இ.த.ச 258
             யாராவது,  அரசாங்க வருமானத்திற்காக உருவாக்கப்படும் முத்திரைத் தாள்களைப் போல, போலியான முத்திரைத் தாள்களை, அவைகள் போலியானது என தெரிந்தப் பின்பும் விற்பனைக்கு வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் குற்றமாகும்.

            இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 258- Sale of counterfeit Government stamp

     Whoever, sells, or offers for sale, any stamp which he knows or has reason to believe to be a counterfeit of any stamp issued by the Government for the purpose of revenue, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - போலி பத்திரங்கள்

இ.த.ச 255

                 யாராவது, இந்திய அரசாங்கத்தின் வருமானத்திற்கென, அரசு அரசாங்க முத்திரைத் தாள்களை வெளியிடுகின்றது,

     அத்தகைய முத்திரைத் தாள்களை போலியாக தயாரிப்பதும் அல்லது அத்தகைய போலியான தயாரிப்பின் எத்தகைய வேலையையும் யார் எந்தக் கட்டத்திலும் செய்ந்தாலும் அல்லது அதில் பங்கு பெற்றாலும் குற்றமாகும்.

            இத்தகைய குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட விலை மதிப்புள்ள முத்திரைத் தாளை போல வேறு வேறு ஒரு மதிப்புள்ள விலைத்தாளைப் போல மாற்றுவதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

Section 255- Counterfeiting Government stamp
     
   Whoever counterfeits, or knowingly performs any part of the process of counterfeiting, any stamp issued by Government for the purpose of revenue, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

Explanation: - A person commits this offence who counterfeits by causing a genuine stamp of one denomination to appear like a genuine stamp of a different denomination.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1.1.1956). 

     யாராவது, இந்திய அரசாங்கத்தின் முத்திரைத் தாள்களை போல போலியான முத்திரைத்தாள்களை உருவாக்கும் இயந்திரங்களை அல்லது கருவிகளை அல்லது பொருட்களை அவைகள் அத்தகைய உபயோகத்திற்கு பயன்படுகின்றது என தெரிந்தும் அவைகளை வைத்திருப்பது குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 256- Having possession of instrument or material for counterfeiting Government stamp

   Whoever has in his possession any instrument or material for the purpose of being used, or knowing or having reason to believe that it is intended to be used, for the purpose of counterfeiting any stamp issued by Government for the purpose of revenue, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
  http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1702