Thursday 26 February 2015

ஆப்பிளின் ஆப்பிளை கடித்தது யார் ?


ஆப்பிளின் ஆப்பிளை கடித்தது யார் ?

சத்தியமா நான் இல்லைன்னு காமெடி பண்ணாதிங்க ப்ரதர். இதுக்கு பின்னாடி நிறைய தகவல்கள் இருக்கு என்னவென்று பார்ப்போம்.

இந்த உலகத்தின் தலை எழுத்தை நான்கு ஆப்பிள்கள் மாற்றியிருக்கிறது


         அவையாவன முதலாவது ஆதாம் சாப்பிட்ட முதல் ஆப்பிள். கடவுளாள் தடுக்கப்பட்ட அந்த கனியை அவன் புசித்தான் அதனால் மனிதன் ஏடன் தோட்டத்திலிருந்து பூமிக்கு அனுப்பபட்டான் ஆதாரம் பைபிள்.

ஆதியாகமம் 3 17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.





          இரண்டாவது  நியுட்டன் ஒரு நாள் காலேஜ்க்கு போகமல் கட்டு அடிச்சிட்டு வந்து ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் நியுட்டன். அப்போது ஆப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இந்த ஆப்பிள் மேல் நோக்கி போகாமல் பூமியை நோக்கி ஏன் வருகின்றது. இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இதன் முலம் E=MC2  என்ற சமன் நமக்கு கிடைத்தது இதன் முலம் அறிவியல் உலகில் நாம் காலடி எடுத்து வைத்தோம் பல சாதனைகளைப்புரிந்தோம் பல கிரகங்களுக்கு சென்றோம், செயற்கைக்கோள்களை ஏவினோம்.



மூன்றாவது அலன் டூரிங், 

அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.
இயந்திரங்களை உணர்வு உள்ளவையாகவும், சிந்திக்கக் கூடியவையாகவும் உருவாக்க முடியுமா என்பது குறித்த செயற்கை அறிவுத்திறன் தொடர்பான விவாதத்துக்கு டூரிங் சோதனை மூலம் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். இவர் தேசிய இயற்பியல் சோதனைக்கூடத்தில் பணிபுரிந்த போது நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்புக்களை செய்தார். ஆனாலும் இவை அவற்றின் முழு வடிவில் அப்போது உருவாக்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டில் இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மான்செஸ்டர் மார்க் I என்னும் உலகின் முதலாவது உண்மையான கணினிகளுள் ஒன்றை உருவாக்கும் பணியில் இணந்துகொண்டார்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிளெச்லி பார்க்கில், ஐக்கிய இராச்சியத்தின், இரகசியக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கான மையத்தில் பணி புரிந்தார். அப்போது சில காலம், ஜேர்மனியின் கடற்படை தொடர்பான இரகசியக் குறியீட்டுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். ஜேர்மன் குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்கான பல நுட்பங்களை இவர் உருவாக்கியுள்ளார்.  நன்றி  விக்கி  

இவர் மர்மமான முறையில் விஷம் செலுத்தப்பட்ட ஆப்பிளை உண்டு மரித்தார் அவர்
தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவதாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அந்த மனிதரை மனோசிக குருவாக நினைத்ததாலும் அவரின் கடைசியாக சாப்பிட்ட ஆப்பிளை உருவகப்படுத்தி கடித்த ஆப்பிளை(BITTEN APPLE) தன் கம்பெனியின் சின்னமாக வைத்தார்.

மேலும் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தான் 
ஆப்பிளை அதிகமதிகம் விரும்புவதாலும் நிறைய தின்பதாலும் அந்தப் பேரை வைத்ததாக கூறினார்.



நான்காவது ஸ்டீவ் ஜாப்ஸ்ன் ஆப்பிள்.   மேலும் வாசிக்க ஸ்டீவ் ஜாப்ஸ்

 
 

 ஆப்பிள்  சின்னம் கடந்து வந்த பாதை : 
Apple : ‘It’s a computer company, not a fruit store.’

The Newton Crest logo (1976) : ‘Newton… A mind forever voyaging through strange seas of thought… alone’




The Rainbow logo (1976-1998) : “What a wonderful urban legend.”





The Monochrome logo (1998 – Present) : 




பின்குறிப்பு: இன்று நிறைய மக்கள் ஆப்பிள் கணினி வாங்கிவிட்டு உபயோகிக்க முடியாமல் நிறைய சிரம படுகின்றார்கள் அவர்களுக்கு ஓர் இனிய செய்தி நிங்கள் vmware - virtual machine இன்ஸ்டால் செய்து அதில் ஓன்றுக்கு மேற்ப்பட்ட OS - Windows / Windows XP / 2008 ஆப்ரேட்டிங் சிஸ்டம் வைத்துக்கொள்ளலாம். அப்படி தான் ஓருவர் வாங்கிவிட்டு உபயோகிக்க முடியாமல் தவித்தார். என் ஆலோசனை படி செய்தார் இப்ப சூப்பர் செந்தில்ன்னு சொல்கின்றார். அவரிடம் நான் கேட்ட கேள்வி தான் இந்த பதிவு. தயவுசெய்து பின்னுட்டம் போடுங்க.


உத்தம வில்லன் விமர்ச்சனம்


 


    உத்தம வில்லன்  விமர்ச்சனம் என்றதும் கமல் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் என்னடா இது படம் அதுக்குள்ள ரிலிஸ் பண்ணிட்டாங்களான்னு நினைத்து தூக்கம் களைந்து விடப்போகுது. உண்மையில் இந்த பதிவு படத்தைப்பற்றி இல்லை அப்புறம்  இது படத்தின் தலைப்பைப்பற்றியது. [சூப்பர் ஜீ] மன்னிக்கவும் எடுத்தவுடன் படத்தலைப்பு விமர்ச்சனம் என்றால் யாரும் இந்த பக்கம் கூட வர மாட்டிங்க இல்லியா? அதனால தான் பாஸ் உங்களை இந்த பக்கம் வர வைக்க இந்த முயற்சி.[பீல் பண்ணாதீங்]

     உத்தம வில்லன் - இது தமிழில் சொல் முன்னணி அல்லது முரண்பாடு உள்ளது போல் இருக்கும் சொல் அடுக்கு  இதனை ஆங்கிலத்தில் oxymoron என்பார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் true lies, known secret,  keep moving, dark light, leaving dead, crazy wisdom. போன்றவை ஆங்கிலத்தில் உள்ள சொல் முன்னணி ஆகும்.



     அதுப்போல உத்தமம் என்பது சுத்தமாக இருப்பதையும் வில்லன் என்பது வில்லத்தனம் பண்ணுவதையும் குறிக்கும். ஆனால் இந்த படத்தில் தலைப்பை கமல் சார் ஏன் தேர்ந்தேடுத்தார் என்பதைப் படத்தை பார்த்தால் தான் தெரியும். ஆனால் தலைப்பை வைத்து பார்க்கும் போது அதில் இரண்டு வேறுப்பட்ட நடிப்பில் கலக்குவார்ன்னு எதிர் பார்க்கின்றேன். அவரது படத்தின் தலைப்பே எப்போதும் வித்தியாசமாக இருக்கும். 1995 வெளிவந்த குருதிப்புனல் தொடங்கி இதற்கு முன் வெளிவந்த விஸ்வரூபம் வரை எல்லா பட தலைப்புகளும் பிரம்மாதம் அருமை.

    அவற்றில் சில எனக்கு பிடித்தவைகள்.


மேலும் தமிழில் இதுப்போல இருக்கும் சில சொல் முன்னணி களைப் இப்போது பார்ப்போம் (தங்களுக்கு தெரிந்தால் மேலும் பகிரவும்)

1. ஊரறிந்த ரகசியம்
2. அ யோக்கியன்
3. கூரையில்ல சுவர்
  
  போன்ற சொற்கள் உள்ளன. புதியதாக நான் ஒரு வார்த்தையை கண்டுப்பிடித்துள்ளேன் அது உத்தம மேனேஜர். ஆமாம் என்ன தான் மேனேஜர் உத்தம நல்லவராக  இருந்தாலும் வேலையின்னு வரும் போது மேனேஜராகவே மாறிடுறார் அல்லவா அதனால் தான் . ஏன் நாளைக்கு நாம் அந்த இடத்திற்கு வந்தாலும் அப்படி தான் இருப்போம். அடுத்து பட விமர்ச்சனம் படம் வந்ததும் பார்த்துவிட்டு எழ்துகிறேன். மறக்காமல் நீங்களும் படத்தை பாருங்கள் என் விமர்ச்சனத்துக்காக வெயிட் பண்ணாதிங்க. (பீல் பண்ணாதிங்க பாஸ் சும்மா தமாஷ்).



 Thanks to கமல்ஹாசன் & wiki [http://en.wikipedia.org/wiki/Oxymoron]



Tuesday 24 February 2015

பாரடாக்ஸ்(Paradox) ஒரு அறிமுகம்


 பாரடாக்ஸ்(Paradox)

 
                       பாரடாக்ஸ்(Paradox).  A paradox is a statement of conclusion that seems self-contradictory but is really true. பாரடாக்ஸுக்கு ஒரு பிரபலமான உதாரணம் “I always lie”. பொய் சொல்லுவது உண்மையாக இருந்தால், இந்த வாக்கியம் மூலம் உண்மையைக் கூறுவதால் நேர்மாறாக தோன்றும். அல்லது பொய் போல தோன்றும் உண்மை. இதில் இரண்டு வாக்கியம் இருக்கும் அதில் ஒன்று உண்மை மற்றோன்று போய் போல தோன்றும் உண்மை.


     உதாரணம் எந்திரன் படத்தில் முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் , ஆமைதான் வெற்றி பெறும் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறதே என்பது கேள்வி.. அதுக்கு பதிலாக சிட்டி ரோபோ பாரடாக்ஸ் என்று எளிமையாக சொல்லும். அதுப்பற்றி அறிய கூகுளில் தேடினேன்.



     அப்புறம் தான் தெரியும் இந்த உலகமே  பாரடாக்ஸ் என்று சின்ன உதாரணம் கடவுள் இருக்காரா இல்லையா என்ற கேள்விக்கு சிட்டி ரோபோ கடவுள்னா யாரு என்று கேள்வி கேட்டும் பதிலாக நம்மை எல்லாம் படைத்தவர் என்று பதில் கூறுவார். சிட்டி ரோபோ என்னை படைத்தது வசிகரன் -   கடவுள் இருக்கார் என்று பதில் சொல்லும். ஒரு பாரடாக்ஸ் எப்படின்னா படைத்தவன் இல்லாமல் படைப்புகள் இல்லை.

      தினம் தினம் நாம் பேசும் ஒவ்வோரு வாக்கியங்களும் பாரடாக்ஸ் சாக அமைந்து வி்டுகின்றது. இது ஏன் இப்பன்னு நிங்கள் கேக்கலாம். நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்று மனிதன் தன் அறிவையும் , மதி நுட்பத்தையும் வைத்து கண்டுப்பிடிப்பான் ஆனால் கணினி எவ்வாறு உண்மையா அல்லது பொய்யா என்று கண்டறியும். இவைகள்  பாரடாக்ஸ் என்று நாம் கணினிக்கு உள்ளிடு செய்ய வேண்டும்.



 சரி உதாரணத்திற்கு வருவோம்.

      முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் , ஆமைதான் வெற்றி பெறும் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறதே என்பது கேள்வி.. 

1. முயல் ஆமையை விட வேகமாக ஒடும் - இது உண்மை
2. ஆமையால் எப்போதும் முயலை முந்த முடியாது  - இதுவும் உண்மை

      அப்படி இருக்கும் போது  ஆமை முயலை முந்தி விடுகிறது லாஜிக் படி நடக்காது ஆனால் நடந்து விடுகின்றது எப்படி ஒன்று ஆமை தந்திரத்தால் ஜெயிக்கின்றது அல்லது முயல் தன்னுடைய கடமையை செய்ய மறந்து விடுகின்றது. இதுப்போன்ற நிகழ்வுகள் பாரடாக்ஸ் என்று அறியப்படுகின்றது.

இதையே எங்க பாட்டி

1. புல் தடுக்கி விழ்ந்த பயில்வான்
2. தான் பிடித்த முயலுக்கு முனு காலு

    கடைசியாக விவேக் கூட இதை ஒரு நகைச்சுவையாக யாருமே இல்லாத கடையில யாருக்குட டி போடுறன்னு கலாய்ப்பாரு








தினம் ஓரு சட்டம் - இ.த.ச 107

தினம் ஓரு சட்டம்

இ.த.ச 107

    முதலில் -   ஒரு நபரைக் குற்றம் புரியுமாறு தூண்டுதல்,  (அல்லது) 

    இரண்டாவது - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் கூடிச் சதி செய்து, அந்தச் சதியின் விளைவாக ஒரு சட்ட விரோதமான காரியத்தைச் செய்வது  (அல்லது )

மூன்றாவது - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் கூடிச் சதி செய்து, அந்தச் சதியின் விளைவாக ஒரு சட்டப்படி செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் இருப்பது,

   வேண்டுமென்றே ஒரு குற்றச் செயல் புரிவதற்கு அல்லது சட்டப்படி செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் இருப்பதற்கு உதவி செய்வது, ஆகியவை குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் என்று சொல்லப்படும்

107. Abetment of a thing.—A person abets the doing of a thing, who—

(First) — Instigates any person to do that thing; or
(Secondly) —Engages with one or more other person or persons in any conspiracy for the doing of that thing, if an act or illegal omission takes place in pursuance of that conspiracy, and in order to the doing of that thing; or
(Thirdly) — Intentionally aids, by any act or illegal omission, the doing of that thing.

Explanation 1.—A person who, by wilful misrepresentation, or by wilful concealment of a material fact which he is bound to dis­close, voluntarily causes or procures, or attempts to cause or procure, a thing to be done, is said to instigate the doing of that thing.


 Illustration A, a public officer, is authorized by a warrant from a Court of Justice to apprehend Z. B, knowing that fact and also that C is not Z, wilfully represents to A that C is Z, and thereby intentionally causes A to apprehend C. Here B abets by instigation the apprehension of C.

Explanation 2.—Whoever, either prior to or at the time of the commission of an act, does anything in order to facilitate the commission of that act, and thereby facilitate the commission thereof, is said to aid the doing of that act.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1535